உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 டிசம்பர் பக். 31
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 டிசம்பர் பக். 31

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இந்த வருஷத்தில் வந்த காவற்கோபுர பத்திரிகைகளைப் படித்தீர்களா? கீழே இருக்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா?

நாம் ஏன் யெகோவாவை மகிமைப்படுத்துகிறோம்?

யெகோவாமேல் இருக்கும் மதிப்பு மரியாதையாலும், அவர்மேல் உயிரையே வைத்திருப்பதாலும், அவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள நாம் ஆசைப்படுவதாலும் அவரை மகிமைப்படுத்துகிறோம்.—w25.01, பக். 3.

ஒருவர் நம்மைக் காயப்படுத்தினால், அவரை மன்னிக்க நாம் என்ன செய்யலாம்?

நம் மனதில் ஏற்பட்ட காயத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. அதைச் சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். அதோடு, மனதில் இருக்கிற வெறுப்பையும் கோபத்தையும் விட்டுவிட்டால் நம் இதயம் பாரமாகாதபடி பார்த்துக்கொள்ள முடியும்.—w25.02, பக். 15-16.

இளம் சகோதரர்களுக்கு மாற்கு எப்படி ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார்?

மற்றவர்களுக்குச் சேவை செய்யும் நியமிப்பு கிடைத்தபோது, மாற்கு அதை மனதார ஏற்றுக்கொண்டார். ஒருசமயம் மாற்குவுக்கு வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தாலும், அவர் சோர்ந்துபோகாமல் தொடர்ந்து சேவை செய்தார். பவுல் மற்றும் வேறுசில அனுபவமுள்ள கிறிஸ்தவர்களோடு தொடர்ந்து நெருக்கமாகப் பழகினார்.—w25.04, பக். 27.

“இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன்” என்று ஜெபம் செய்தபோது, இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? (யோவா. 17:26)

இயேசுவின் சீஷர்களுக்கு ஏற்கனவே யெகோவாவின் பெயர் தெரிந்திருந்தது. அந்தப் பெயருக்குச் சொந்தமான நபரைப் பற்றித்தான் இயேசு அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். அதாவது, யெகோவாவின் விருப்பங்கள் என்ன, அவர் என்னவெல்லாம் செய்கிறார், அவருடைய குணங்கள் என்ன போன்ற விஷயங்களை அவர் தெரியப்படுத்தினார்.—w25.05, பக். 20.

நாம் அடக்கத்தோடு இருந்தால் எதை ஏற்றுக்கொள்வோம்?

நமக்கு சில விஷயங்கள் தெரியாது என்பதை ஏற்றுக்கொள்வோம். உதாரணத்துக்கு, இந்த உலகத்துக்கு எப்போது முடிவு வரும்... அந்தச் சமயத்தில் யெகோவா எப்படிச் செயல்படுவார்... நாளைக்கு என்ன நடக்கும்... யெகோவா நம்மை எந்தளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்... என்றெல்லாம் நமக்குத் தெரியாது.—w25.06, பக். 14-18.

ஒரு கட்டுரையிலிருந்து அல்லது பேச்சிலிருந்து நன்மை அடைய நாம் என்ன செய்யலாம்?

நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘மற்றவர்கள் நம்புவதற்கு உதவும் என்ன ஆதாரங்கள் இதில் இருக்கின்றன? மற்றவர்களுக்குச் சொல்லித்தர உதவும் ஏதாவது நல்ல உதாரணம் இதில் இருக்கிறதா? இந்தச் சத்தியம் யாருக்கு உதவியாக இருக்கும்?’—w25.07, பக். 19.

யெகோவா தாவீதிடம் நடந்துகொண்ட விதத்திலிருந்து, அவர் மன்னிக்கும் விதத்தைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

தாவீது படுமோசமான தவறுகளைச் செய்திருந்தாலும், அவர் உள்ளப்பூர்வமாக மனம் திருந்தியபோது யெகோவா அவரை மன்னித்தார். (1 ரா. 9:4, 5) இன்றும் நம்மை மன்னித்த பிறகு, நாம் முன்பு செய்த பாவங்களை யெகோவா ஞாபகம் வைத்துக்கொண்டே இருப்பதில்லை. எதிர்காலத்தில் அந்தப் பாவங்களுக்காக நம்மிடம் கணக்குக் கேட்கவும் மாட்டார்.—w25.08, பக். 17.

நம்மிடம் பைபிளைப் படிப்பவர் ஒரு குறிப்பைப் புரிந்துகொள்ள கஷ்டப்பட்டால் என்ன செய்யலாம்?

பலமுறை பைபிளிலிருந்து சொல்லிக்கொடுத்த பிறகும் அவர் ஒரு குறிப்பைப் புரிந்துகொள்ள கஷ்டப்பட்டால், அதை விட்டுவிட்டு அடுத்த குறிப்புகளுக்குப் போகலாம்; பிற்பாடு அதை விளக்கலாம்.—w25.09, பக். 24.

பாவத்துக்கு “வஞ்சக சக்தி” இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. (எபி. 3:13) அதற்கு என்ன அர்த்தம்?

பாவம் நம்மைத் தப்பு செய்யத் தூண்டுகிறது. அதுமட்டுமல்ல, யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருக்கிறதா போன்ற சந்தேகங்களைத் தொடர்ந்து கிளப்பிக்கொண்டே இருக்கிறது.—w25.10, பக். 16.

யெகோவாவிடம் நெருங்கிப்போகும் விதத்தில் ஜெபம் செய்ய என்ன மூன்று விஷயங்களைச் செய்யலாம்?

(1) யெகோவாவுடைய குணங்களை யோசித்துப் பார்க்கலாம். (2) இப்போது என்ன பிரச்சினையோடு போராடுகிறோம் என்று யோசித்துப் பார்க்கலாம்; உதாரணத்துக்கு, யாரையாவது மன்னிக்க வேண்டியிருந்தால் அதற்காக ஜெபம் செய்யலாம். (3) நேரமெடுத்து நிதானமாக ஜெபம் செய்யலாம். அப்படிச் செய்யும்போது மனதின் ஆழத்தில் இருக்கிற உணர்ச்சிகளைக்கூட யெகோவாவிடம் சொல்ல முடியும்.—w25.10, பக். 19-20.

வயதானவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?

வயதானவர்களைத் தவறாமல் போய் பார்க்கலாம், ஃபோன் பண்ணலாம். அவர்கள் டாக்டரிடம் போகும்போது கூடப் போகலாம். அவர்களோடு சேர்ந்து வித்தியாசமான முறைகளில் ஊழியம் செய்யலாம்.—w25.11, பக். 6-7.

ஒரு கிறிஸ்தவ திருமணம் கண்ணியமாக நடக்க என்ன செய்யலாம்?

சட்டப்படி செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யுங்கள். கல்யாணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியின்போது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள் தெளிவாகத் தெரிவதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள். உடையையும் அலங்காரத்தையும் எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள். பைபிளுக்கு எதிரான சடங்குகளைத் தவிர்த்திடுங்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் திட்டமிடும்போது நல்ல பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்ளுங்கள்.—w25.12, பக். 21-24.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்