20 எகிப்து தேசத்தில் நீங்கள் செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பற்றி இன்றுவரை உலகம் பேசுகிறது. நீங்கள் இஸ்ரவேலில் உங்களுடைய பெயருக்குப் புகழ் சேர்த்திருக்கிறீர்கள். இன்றுவரை மற்ற எல்லா ஜனங்களின் மத்தியிலும் உங்கள் புகழைப் பரப்பியிருக்கிறீர்கள்.+
3 அவர் செய்யும் அதிசயங்களும் அற்புதங்களும் எவ்வளவு பிரமிப்பாக இருக்கின்றன! அவருடைய ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும், அவருடைய அரசாட்சி தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும்.+