-
2 தீமோத்தேயு 4:7, 8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 சிறந்த போராட்டத்தைப் போராடியிருக்கிறேன்;+ என் ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடித்திருக்கிறேன்,+ கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்திருக்கிறேன். 8 இப்போதுமுதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது;+ நீதியுள்ள நீதிபதியான நம் எஜமான்+ நியாயத்தீர்ப்பு நாளில் அதை எனக்குப் பரிசாகத் தருவார்;+ எனக்கு மட்டுமல்ல, அவர் வெளிப்படப்போவதை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற எல்லாருக்கும் தருவார்.
-
-
வெளிப்படுத்துதல் 20:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 பின்பு, சிம்மாசனங்களைப் பார்த்தேன். அதன்மேல் உட்கார்ந்திருந்தவர்களுக்கு நியாயந்தீர்க்கிற அதிகாரம் கொடுக்கப்பட்டது. இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுத்ததற்காகவும், கடவுளைப் பற்றிப் பேசியதற்காகவும் கொல்லப்பட்டவர்களை* பார்த்தேன். அவர்கள் மூர்க்க மிருகத்தையோ அதன் உருவத்தையோ வணங்காதவர்கள், தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதன் அடையாளக் குறியைப் பெறாதவர்கள்.+ அவர்கள் உயிரோடு எழுந்து கிறிஸ்துவுடன் 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்தார்கள்.+
-