திரும்ப சென்று சந்திக்க நிச்சயமாயிருங்கள்
1 நற்செய்தியின் ஊழியர்களாக, சீஷர்களை உண்டுபண்ணும்படி நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். (மத். 28:19, 20) மறுசந்திப்புகள் செய்வது நம்முடைய சீஷர்கள்-உண்டுபண்ணும் வேலையின் ஒரு முக்கியமான பாகமாய் இருக்கிறது. ஜீவன்கள் உட்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிந்திருப்பதால், ஆரம்பத்தில் காண்பித்த அக்கறையை விருத்தி செய்ய எல்லா முயற்சியும் எடுக்க நாம் விரும்புகிறோம்.
2 நாம் பிரசுரங்கள் அளித்த ஒவ்வொரு நபரையும் மறுசந்திப்பு செய்ய தகுதியுள்ளவராக கருதவேண்டும். ஆயினும், பிரசுரங்களை அளிப்பது மட்டுமே ஒரு மறுசந்திப்பு செய்வதற்கான அடிப்படையாக இருக்கக்கூடாது. பைபிளின் செய்தியை கலந்தாலோசிக்க அநேகர் விரும்புகின்றனர், ஆனால் பிரசுரங்களை ஏற்க மறுக்கின்றனர். ஆகையால் அக்கறை இருப்பதைக் கண்டுபிடித்தால், நாம் மறுபடியும் சென்று சந்தித்து அதை விருத்திசெய்ய எல்லா முயற்சியும் செய்ய வேண்டும்.
3 அளிப்புகளை பின்தொடருதல்: பிரசுர அளிப்புகள், மறுசந்திப்புகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகவும் அதிகமாக இருப்பதால், முன்னேற்றம் செய்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஒரு பயனியர் ஒரு புத்தகத்தை அளித்திருந்தார், ஆனால் வீட்டுக்காரரின் பங்கில் மிக குறைவான அக்கறை இருப்பதை கவனித்தார். ஒரு நாள் பிற்பகல் அவருடைய மற்ற எல்லா மறுசந்திப்புகளையும் முடித்துவிட்ட பிறகு, அந்தச் சகோதரர் இந்த நபரை சென்று சந்திக்க தீர்மானித்தார். ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
4 ஒரு சகோதரர் ஒரு நபரிடம் இரண்டு பத்திரிகைகளை அளித்திருந்தார். அவர் உண்மையில் அக்கறையுள்ளவராக இல்லை என்று எண்ணி அவரைப் பற்றி மறந்துவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அந்த நபர் முழுக்காட்டுதல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உள்ளூர் சபைக்கு ஒரு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார். ஒரு மிஷனரி சகோதரி 74 நபர்கள் பிரஸ்தாபிகளாவதற்கு உதவினார். அவ்வாறு உதவி செய்வதற்கு எது அதிமுக்கியமான காரணமாக இருந்ததாக அவர் உணர்ந்தார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் பத்திரிகை ஊழியம் அதிகம் செய்தோம். பத்திரிகைகளை பெற்றுக்கொண்ட நபர்களோடு பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கும்வரை நான் தொடர்ந்து மறுசந்திப்புகள் செய்து வந்தேன்.”
5 சில சமயங்களில் முதல் சந்திப்பில் ஒரு துண்டுப்பிரதியை மட்டும்தான் வீட்டுக்காரரிடம் விட்டுவர நம்மால் முடியும். எப்போதும், மறுசந்திப்புகளில் ஒரு பைபிள் படிப்பை நடித்துக் காண்பிக்க துண்டுப்பிரதிகளை திறம்பட்ட விதமாக உபயோகிக்கலாம். ஒரு வட்டாரக் கண்காணி ஒரு பிரஸ்தாபியோடு வேலை செய்கையில், ஒரு பெண்ணிடம் ஒரு துண்டுப்பிரதியை விட்டு வந்தார். அது மிகவும் ஒரு சுருக்கமான சந்திப்பாக இருந்தது. ஆனால் திரும்பவும் சென்று சந்திக்கும்படி அந்தச் சகோதரியை உற்சாகப்படுத்தினார். அந்தச் சகோதரி மறுசந்திப்பு செய்து ஒரு பைபிள் படிப்பை உடனடியாக ஆரம்பித்தார்.
6 அக்கறை காண்பிக்கப்படும்போது: வீட்டுக்காரர் முதல் சந்திப்பில் பிரசுரங்களை எடுத்துக்கொள்ளவில்லையென்றால், அவருக்கு அக்கறை இல்லை என்பதை இது எப்போதும் அர்த்தப்படுத்தாது. ஓர் இளம் தம்பதியை ஒரு பிரஸ்தாபி மறுபடியும் சென்று சந்தித்த போது, நம்முடைய பிரசுரங்களில் சிலவற்றை அவர்கள் வைத்திருப்பதையும், இதற்கு முன்பு பைபிள் படிப்பு கொண்டிருந்ததையும் கண்டுபிடித்தாள். அவர்கள் மறுபடியும் படிப்பை ஆரம்பிக்க உடனடியாக ஒத்துக்கொண்டனர். பத்திரிகைகளை பெற்றுக்கொள்வதற்கு எப்போதும் மறுப்பு தெரிவித்த ஒரு பெண்ணுக்கு வெளியில் காணப்படாத அக்கறை இருப்பதை ஒரு விசேஷ பயனியர் கண்டுபிடித்தார். அந்தப் பயனியர் பத்திரிகைகளை ஒருபுறம் வைத்துவிட்டார். சிறு புத்தகங்கள் ஒன்றில் உள்ள சில பாராக்களை கலந்து ஆலோசிக்க அந்தப் பெண் விரும்பினார். ஒருசில சந்திப்புகளுக்குப் பிறகு, வாரத்துக்கு இருமுறை அந்தப் பெண் பைபிள் படிப்பை கொண்டிருந்தார்.
7 யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்த ஒவ்வொருவரும் சீஷர்களை உண்டுபண்ணும் வேலையில் பங்குகொள்ள வேண்டிய உத்தரவாதத்தை உணர வேண்டும். அக்கறை காண்பிக்கும் அனைவரையும் நாம் ஒழுங்காகச் சென்று சந்திக்கையில், நமக்கும் ‘நம் உபதேசத்தைக் கேட்பவர்களுக்கும்’ செழுமையான ஆசீர்வாதங்களை கொண்டுவரும் கனிகளை நாம் அறுப்போம்.—1 தீமோ. 4:16.