மார்ச் மாத ஊழியக் கூட்டங்கள்
மார்ச் 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 63 (32)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். தற்போதைய இதழ்களை அடிப்படையாகக் கொண்ட பத்திரிகை அளிப்புகளை சிறப்பித்துக் காட்டுங்கள். வார இறுதி நாட்களில் தொகுதியாக சாட்சி கொடுக்கும் வேலையை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “மார்ச் மாதத்துக்கு உங்களுடைய அளிப்பை தயாரியுங்கள்.” (10 நிமி.) கேள்விகளும் பதில்களும். (8 நிமி.) கொடுக்கப்பட்டுள்ள அளிப்புகளில் சபை பிராந்தியத்துக்கு அதிக பொருத்தமாக இருக்கும் இரண்டு அல்லது மூன்று நன்கு-தயாரிக்கப்பட்ட நடிப்புகள். (2 நிமி.) கொடுக்கப்பட்டிருக்கும் அளிப்புகளில் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான அளிப்புகளை கற்றுக்கொண்டு உபயோகிக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “ஆதாமும் ஏவாளும்,” நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 27-9. (5 நிமி.) “ஆதாமும் ஏவாளும் வெறுமென கற்பனைப் (போலியான) பாத்திரங்களா?” என்ற உபதலைப்பின் கீழ் உள்ள பொருளைச் சார்ந்த முன்னுரை பேச்சு. (6 நிமி.) “ஆதாமின் பாவம் கடவுளின் சித்தமாக, திட்டமாக இருந்ததா?” என்ற கேள்வியை ஒரு பிரஸ்தாபி ஒரு நபரிடம் விட்டுச்சென்று பிறகு மறுசந்திப்பு செய்வதை போன்ற நடிப்பு. (4 நிமி.) நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் இருக்கும் “ஒருவர் இவ்வாறு சொன்னால்—” என்ற பகுதியை மறுசந்திப்புகளில் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளாக உபயோகிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். கூடுதலான உதாரணங்களைக் குறிப்பிடுங்கள்.
பாட்டு 30 (117), முடிவு ஜெபம்.
மார்ச் 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 215 (34)
10 நிமி: வாரத்துக்கான ஊழிய ஏற்பாடுகள் உட்பட சபை அறிவிப்புகள். இந்த வாரமும் இந்த மாதமும் மறுசந்திப்புகள் செய்வதற்கு கூடுதலான முயற்சி செய்யும்படி உற்சாகப்படுத்துங்கள். அக்கறை காண்பிக்கும் ஆட்களை மறுபடியும் சந்திக்கையில் உபயோகிப்பதற்கு இந்த ஊழியக் கூட்டம் நான்கு நடைமுறையான அளிப்புகளை விளக்கி, நடித்துக் காட்டும். இந்த வாரம் உபயோகிப்பதற்கு ஒன்று அல்லது அதற்கும் அதிகமானதை தேர்ந்தெடுங்கள்.
20 நிமி: “நீங்கள் மறுசந்திப்பு செய்யும்போது சம்பாஷணையை ஆரம்பித்தல்.” (3 நிமி.) பாரா 1, 2-ல் உள்ள குறிப்புகளை கொண்டு முன்னுரை பேச்சு. (15 நிமி.) பாராக்கள் 3-5-ல் உள்ள மூன்று அளிப்புகளில் ஒவ்வொன்றையும் நன்கு-தயாரித்து நடித்துக் காட்டுங்கள். நேரம் அனுமதிக்குமேயானால், ஒவ்வொரு நடிப்புக்குப் பிறகும், அளிப்புகளின் நடைமுறையான தன்மையைப் பற்றி குறிப்புகள் சொல்லலாம். (2 நிமி.) அக்கறை காண்பித்த ஆட்களோடு சம்பாஷணைகளை ஆரம்பிப்பதற்கு பாரா 6-ல் உள்ள கருத்துக்களைக் கொண்டு கொடுக்கப்பட்டிருக்கும் அளிப்புகளில் ஒன்றையாவது தயாரித்து உபயோகிக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “துணைப்பயனியர் ஊழியம் செய்ய உங்களால் முடியுமா?” மூப்பரும், கடந்த மாதங்களில் துணைப்பயனியர் ஊழியம் செய்து, மறுபடியும் ஏப்ரல், மே மாதங்களில் ஊழியம் செய்ய திட்டமிட்டிருக்கும் அநேக பிரஸ்தாபிகளும் கலந்தாலோசிக்கின்றனர். கட்டுரையில் இருக்கும் குறிப்புகளை சிந்திக்கையில், ஏன் துணைப்பயனியர் ஊழியம் செய்ய விரும்புகின்றனர் என்று பிரஸ்தாபிகள் விளக்குகின்றனர். அவர்கள் அனுபவித்த ஆசீர்வாதங்களைச் சொல்கின்றனர். மணிநேரத் தேவையை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் செய்ய வேண்டியிருந்த மாற்றங்களை விளக்குகின்றனர். துணைப்பயனியர் ஊழியம் செய்வதனால் வரும் மகிழ்ச்சியை கலந்தாலோசிப்பு அழுத்திக் காண்பிக்கிறது, தனிப்பட்ட சூழ்நிலைமைகள் அனுமதிக்குமேயானால் இந்த ஊழிய சிலாக்கியத்தைக் குறித்து சிந்திக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துகிறது.
பாட்டு 114 (61), முடிவு ஜெபம்.
மார்ச் 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 211 (105)
10 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை, நன்கொடை பெற்றுக்கொண்டதாக சங்கம் தெரிவித்திருக்கும் கடிதங்கள். ராஜ்ய அக்கறைகளுக்காக தங்கள் பண ஆதரவை கொடுத்ததற்கு சகோதரர்களை பாராட்டுங்கள். இந்த வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “திரும்ப சென்று சந்திக்க நிச்சயமாயிருங்கள்.” கேள்விகளும், பதில்களும், நடிப்புகளும். பாரா 5-ஐ சிந்தித்த பிறகு, துண்டுப்பிரதி விட்டுவந்த நபரோடு மறுசந்திப்பு செய்வதை நடித்துக் காட்டுங்கள். என்றும் வாழலாம் புத்தகத்தில் பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு கலந்தாலோசிப்பு வழிநடத்துகிறது. பாரா 6-ஐ சிந்தித்த பிறகு, இதற்கு முன்பு பிரசுரங்கள் வேண்டாமென்று மறுத்த நபரின் பேரில் மறுசந்திப்பு செய்வதை நடித்துக் காட்டுங்கள். நடிப்பை தொடர்ந்து, முதல் சந்திப்பில் பிரசுரங்களை பெற்றுக்கொள்ளாத இந்த நபரின் பேரில் ஏன் மறுசந்திப்பு செய்ய தீர்மானித்தார் என்று பிரஸ்தாபியை கேளுங்கள்.
15 நிமி: “உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் கடவுளை முதலில் வையுங்கள்.” காவற்கோபுரம், மே 15, 1991, பக்கங்கள் 4-7-ஐ அடிப்படையாகக் கொண்ட பேச்சு. (இந்திய மொழிகளில்: “இயேசுவின் தேவபக்திக்குரிய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.” காவற்கோபுரம், ஜூலை 1, 1990.)
பாட்டு 133 (68), முடிவு ஜெபம்.
மார்ச் 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 115 (36)
10 நிமி: சபை அறிவிப்புகள், இந்த வார வெளி ஊழிய ஏற்பாடுகள், தேவராஜ்ய செய்திகள்.
15 நிமி: “பயனியர்களுக்கு ஆதரவைக் காண்பித்தல்.” கேள்விகளும், பதில்களும், பேட்டியும். பயனியர்களுக்கு தேவையான ஆதரவு கொடுக்கப்படும் போது முழு சபையும் அடையும் ஆசீர்வாதங்களை அழுத்திக் காட்டுங்கள். பயனியர்களை பேட்டி காணுங்கள், மூப்பர்களாலும் சபையில் இருக்கும் மற்றவர்களாலும் பயனியர் ஊழியத்தில் அவர்கள் எவ்வாறு உதவப்பட்டிருக்கின்றனர் என்பதை சிறப்பித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “கிறிஸ்தவ இளைஞர்கள்—விசுவாசத்தில் உறுதியாய் இருங்கள்.” காவற்கோபுரம், ஜூலை 15, 1991, பக்கங்கள் 23-26-ல் உள்ள கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட குடும்ப கலந்தாலோசிப்பு. கலந்தாலோசிப்பில் மனைவியையும் பிள்ளைகளையும் உட்படுத்தி தகப்பன் தலைமை வகித்து நடத்துகிறார். பள்ளியில் பல்வேறு விசுவாச பரீட்சைகளை இளைஞர்கள் வெற்றிகரமாக எதிர்ப்படுவதற்கான வழிகளை தனிப்படுத்திக் காட்டவும். (இந்திய மொழிகளில்: “நற்செய்தியைக் குறித்து வெட்கப்படேன்.” காவற்கோபுரம் ஜுன் 1, 1990.)
பாட்டு 43 (103), முடிவு ஜெபம்.