உங்களுடைய முதல் சந்திப்பில் அடித்தளமிடுங்கள்
1 முதல் சந்திப்பில் சரியான அடித்தளத்தை நாம் இடும்போது பயனளிக்கும் மறுசந்திப்புகளைச் செய்வது எளிதாக இருக்கும். அதைச் செய்வதற்கு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் நமக்கு உதவும்.
2 கீழ்க்கண்ட பிரசங்கம், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில், பக்கம் 10-ல் “பைபிள்/கடவுள்” என்ற தலைப்பின் கீழுள்ள இரண்டாவது அறிமுகத்தின் அடிப்படையில் உள்ளது.
ஒரு சிநேகபான்மையான வாழ்த்துதலுக்குப்பின், இவ்வாறு சொல்லுங்கள்:
◼ “வளர்ந்துகொண்டே போகும் அன்றாட பிரச்னைகளுக்கு நடைமுறையான பதில்களை எங்கே கண்டடையலாம் என்பதுபற்றி அதிகமதிகமான மக்கள் இன்று நிச்சயமற்றவர்களாய் உணர்வதையே நாம் காண்கிறோம். நீங்கள் அதை உண்மையானதாகக் கண்டிருக்கிறீர்களா? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] மக்கள் உதவிக்காக பைபிளை நோக்குபவர்களாய் இருந்தனர். ஆனால் இப்போது அநேகருக்குச் சந்தேகங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். நீங்கள் பைபிளைப்பற்றி எவ்வாறு உணருகிறீர்கள்?” அதன் நம்பத்தக்கநிலையைக்குறித்து வீட்டுக்காரர் சந்தேகம் தெரிவித்தாரென்றால், நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் என்ற துண்டுப்பிரதியை வெளியே எடுத்து, அதன் பக்கம் 2-வது பக்கத்தில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் பாராக்களை வாசியுங்கள். பைபிள் கடவுளுடைய வார்த்தை என்று வீட்டுக்காரர் ஒத்துக்கொண்டால், துண்டுப்பிரதியில் 2-வது பக்கத்தின் இரண்டாம் பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள வேதவசனங்களை எடுத்து, வாசித்து, இவற்றைச் சுருக்கமாக அவருடன் கலந்தாலோசியுங்கள்.
3 உங்கள் பிராந்தியத்தில் நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கும் அநேகர் இருந்தார்களென்றால், அக்கறையைத் தூண்டுவதற்கு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் 10-வது பக்கத்தில் உள்ள ஐந்தாவது அறிமுகத்தைப் பொருத்தியமைத்துப் பாருங்கள்.
நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “இப்போது உலகிலிருக்கும் எல்லா சச்சரவுகளின் காரணமாக, அநேக உண்மைமனதுள்ள மக்கள் கடவுள்மேல் நம்பிக்கை வைப்பதைக் கடினமாக உணருகின்றனர். நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] இந்தத் துண்டுப்பிரதி மனிதரும், விஞ்ஞானமும் பைபிளும்பற்றி என்ன சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள்.” பின்னர், நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் என்ற துண்டுப்பிரதியின் 3-வது பக்கத்தில் ஐந்தாவது பாராவை வாசியுங்கள்.
4 உங்களுடைய அடுத்த சந்திப்பை அமைத்துக்கொள்வதற்காக துண்டுப்பிரதியிலிருந்து கேள்விகளை எழுப்புங்கள்: உங்களுடைய முதல் சந்திப்பு தொடர்ச்சியான பயனளிக்கும் சந்திப்புகளுக்கு வெறும் தொடக்கமாகவே இருக்கும்படியாக திட்டமிடுங்கள். அதிகமான விளக்கங்களினுட்புகவேண்டும் என்று நினைக்காதீர்கள்; அதற்கென்று, நீங்கள் அவர்மேல் உண்மையான அக்கறையைக் கொண்டில்லை என்று வீட்டுக்காரர் உணரும்விதத்தில் அவசரமாகவும் இருந்துவிடக்கூடாது. துண்டுப்பிரதியிலிருந்து இரண்டு அல்லது மூன்று பாராக்களை வாசித்தப் பிறகு, மற்றொரு சந்திப்பில் கலந்தாலோசிப்பதற்கு ஒரு கேள்வியை எழுப்புங்கள்.
5 உதாரணமாக, 4-வது பக்கத்திலுள்ள மூன்றாம் பாராவிற்குக் கவனத்தைத் திருப்பி, “எதிர்காலத்தைக்குறித்து அது சொல்வதை நம்புவதற்குப் போதிய ஆதாரத்தைப் பைபிள் கொடுக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” இது மறுசந்திப்பில், என்றும் வாழலாம் புத்தகத்தின் அதிகாரம் 5-ஐ சிந்திப்பதற்கேதுவாக, சுட்டிக்காண்பிக்கக்கூடிய ஒரு குறிப்பை ஏற்படுத்தும்.
6 வீட்டுக்காரர் நம்முடைய செய்தியில் அக்கறை காண்பித்து, பிரசுரங்களை எடுப்பதுபற்றி மெளனமாக இருந்தால், முதல் சந்திப்பிலேயே நீங்கள் என்றும் வாழலாம் புத்தகத்தை அளிக்காமல் இருக்க நினைக்கலாம். எனினும், முக்கியமானதும் ஆர்வமூட்டுகிறதுமான அந்தப் பொருளை, என்றும் வாழலாம் புத்தகத்தின் பொருளடக்கத்திலிருந்து காண்பிப்பதன் மூலம் வீட்டுக்காரரின் அக்கறையைத் தூண்டுங்கள். பின்பு அந்த வீட்டுக்காரரை நீங்கள் மறுபடியும் சந்திக்கும்போது, அந்தப் புத்தகத்தைப் பெரிய பதிப்பாக இருந்தால் ரூ40-க்கு அல்லது சிறியதென்றால் ரூ20-க்கு அளிக்கலாம்.
7 ஒவ்வொரு வீட்டுக்காரரையும் ஒரு சீஷனாகும் சாத்தியமுள்ளவர் என்று கருதினோமானால், நம்முடைய முடிவான குறிப்புகளை ஒரு மறுசந்திப்பிற்கு அடித்தளமிடும் வகையில் பயன்படுத்த முயற்சி செய்வோம்.