பயனுள்ள விளைவுகளைஉண்டுபண்ணத்துண்டுப்பிரதிகளை உபயோகித்தல்
1 யெகோவாவின் நவீன நாளைய அமைப்பு வெற்றிகரமாகத் துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்திய ஒரு சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது. உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி என்ற நம்முடைய சட்டப்பூர்வமான சங்கத்தின் பெயர்தானே, நற்செய்தியைப் பரப்புவதில் துண்டுப்பிரதி (டிராக்ட்) வகிக்கும் இன்றியமையாதப் பாகத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆண்டு 1881 முதற்கொண்டு 1918 வரையில் 30 கோடிக்கும் மேலான துண்டுப்பிரதிகள் யெகோவாவின் மக்களால் விநியோகிக்கப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் கிறிஸ்துவினுடைய சகோதரர்களின் மீதியானோரின் பாகமானவர்களில் அநேகர், இந்த ஆரம்பகாலத் துண்டுப்பிரதிகளின் மூலமாகச் சத்தியத்துக்கு முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.
2 நான்கு வண்ணங்களில் வெளியான சிறிய துண்டுப்பிரதிகளின் உபயோகத்தின்மீது 1987-ல் புதுப்பிக்கப்பட்ட வலியுறுத்துதல் கொடுக்கப்பட்டது; அதுமுதற்கொண்டு அது கிடைக்கப்பெற்று வந்திருக்கிறது. அது 1992 “ஒளி கொண்டுச்செல்வோர்” மாவட்ட மாநாட்டில் அறிவிக்கப்பட்டது; இந்தத் தொடர் வரிசைத் துண்டுப்பிரதிகள், வண்ணங்கொண்டதும் சிந்தனையைத் தூண்டுகிறதுமான நான்கு கூடுதலான துண்டுப்பிரதிகளோடு அதிகரிக்கலாயின. அவை: மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல், குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள், நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? மற்றும் இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? உங்களுடைய ஊழியத்தில் பயனுள்ள விளைவுகளை உண்டுபண்ண நீங்கள் எட்டுத் துண்டுப்பிரதிகள் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறீர்களா?
3 இந்தத் துண்டுப்பிரதிகளைத் திறம்பட்ட விதமாகப் பயன்படுத்துவதிலிருந்து நல்ல விளைவுகள் வருகின்றன. நாம் அவை ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருப்பது அவசியம். உதாரணமாக, ஒவ்வொன்றும் எதைப்பற்றி கலந்தாலோசிக்கிறது என்பதை மனதில் பதிய வைப்பதற்கு நீங்கள் அவற்றைக் கவனமாக வாசித்துவிட்டீர்களா? ஒவ்வொரு துண்டுப்பிரதியும் எந்த விதமான நபருக்கு அக்கறையைத்தூண்டும் என்பதைப்பற்றி நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? நீங்கள் முற்றுமுழுக்க ஒவ்வொரு துண்டுப்பிரதியையும் நன்கு அறிந்திருப்பது, வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் நீங்கள் சந்தர்ப்பச் சாட்சி கொடுக்கக்கூடிய அநேக சந்தர்ப்பங்களிலும் அவற்றைப் பயன்படுத்துவதில் உங்களுடைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும்.
4 வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பயன்படுத்துங்கள்: ஒரு வட்டாரக் கண்காணி எழுதுகிறார்: “நான் என்னுடைய பெரும்பாலான சம்பாஷணையை இந்தத் துண்டுப்பிரதியைக்கொண்டு ஆரம்பிப்பதன்மூலம் நல்ல வெற்றியை அடைந்திருக்கிறேன்.” நீங்கள் இந்த அணுகுமுறையை முயற்சித்திருக்கிறீர்களா? உங்களுடைய சம்பாஷணையை அறிமுகப்படுத்துவதற்குத் துண்டுப்பிரதிகளை ஒரு கருவியாக ஏன் பயன்படுத்தக்கூடாது? எட்டுத் துண்டுப்பிரதிகளுடன், நாம் இப்பொழுது அதிலிருந்து தெரிந்தெடுப்பதற்கு ஆவலைத்தூண்டும் எட்டு அறிமுகங்களைக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு துண்டுப்பிரதியும் ஒரு பைபிள் படிப்பை, ஆரம்ப சந்திப்பில் அல்லது மறுசந்திப்பில் தொடங்குவதற்கு நமக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.
5 துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துவதற்கு மற்ற சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. கதவருகில் சம்பாஷிக்கும்போது, அந்த நபர் சமீபத்தில் அன்பானவரை மரணத்தில் இழந்திருக்கிறார் என்பதையோ குடும்பத்திலுள்ள ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்பதையோ நீங்கள் அறிந்துகொள்ளலாம். அதிக துக்கத்தை அனுபவிக்கிற மக்கள் அல்லது நீடித்தகாலப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு முயற்சிசெய்துவருகிறவர்கள் அடிக்கடி எதிர்மறையான உணர்ச்சிகளை வளர்த்து, மனச்சோர்வடைந்தவராக ஆகின்றனர். மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் துண்டுப்பிரதியில் காணப்படுகிற உற்சாகமளிக்கும் செய்தியைப் பகிர்ந்துகொள்வது ஆ, எவ்வளவு அன்பானதாயிருக்கும்! அந்த நபர் சமீபத்தில் விவாகரத்துச் செய்யப்பட்டார் அல்லது தன்னுடைய வேலையை இழந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இத்தகைய அனுபவங்கள் அதிரவைப்பவையாகவும் குடும்பத்திற்கு மிகுந்த சோதனையாகவும் இருக்கலாம். குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் துண்டுப்பிரதியில் பக்கம் 2-லுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள்: “இன்று ஏன் குடும்பங்கள் இப்படிப்பட்ட துயரார்ந்தப் பிரச்னைகளால் தீவிரமாகத் தாக்கப்படுகின்றன? நாம் எவ்வாறு குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்கலாம்?” ஒருவேளை அந்த நபர் மனதில் கொண்டிருக்கக்கூடிய மிக முக்கியமானக் கேள்விகளாகத்தானே இவை இருக்கலாம். உடனடியான அக்கறைத் தெளிவாகக் காணப்படாதபோதிலுங்கூட, அந்தத் துண்டுப்பிரதியை அவர் பிறகு வாசிப்பது சாத்தியமாயிருக்கிறது.—பிர. 11:6.
6 சில சபைகளில் பிராந்தியம் அடிக்கடி வேலைசெய்யப்பட்டிருக்கிறது, பெரும்பாலான மக்கள் நம்முடைய பிரசுரங்களில் சிலவற்றை ஏற்கெனவே வைத்துமிருக்கின்றனர். இந்தத் துண்டுப்பிரதிகளை உபயோகிப்பதன் மூலம், அக்கறையூட்டக்கூடிய ஒன்றை வீட்டுக்காரரோடு கலந்தாலோசித்து, அவர்களுடைய கவனத்தைத் திருப்பி, ராஜ்ய நம்பிக்கையைப்பற்றி அவர்களைச் சிந்திக்கச்செய்வதற்கு ஒரு வாய்ப்பைக் கொண்டிருப்போம். அந்தச் சமயத்தில், கலந்தாலோசிக்கக்கூடிய ஒரு கேள்வியை அவர்களுடைய மனங்களில் விதையுங்கள். ஒரு மறுசந்திப்புச் செய்து, இந்த அக்கறையை மேலுமாக வளருங்கள். காலப்போக்கில் ஒரு சிற்றேட்டையோ அவர்கள் ஏற்கெனவே வைத்திருக்கிற ஒரு புத்தகத்தையோ பயன்படுத்தி அவர்களோடு படிப்பைத் தொடங்கக்கூடியவர்களாய் இருக்கலாம்.
7 சந்தர்ப்பம் கிடைக்கும்போது துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்: துண்டுப்பிரதிகளை நாம் எளிதில் எடுக்குமளவிற்கு—நம்முடைய சட்டை பையில், கோட் பாக்கெட்டில், பணப்பையில், அல்லது சாட்சிகொடுக்க வைத்திருக்கும் பையில்—வைத்திருப்போமாகில், எங்கெல்லாம் மக்களைக் காண்கிறோமோ அங்கெல்லாம் நாம் அவற்றை அநேக வித்தியாசப்பட்ட சமயங்களில் பயன்படுத்தலாம். கடைக்குச்செல்கையில், பயணஞ்செய்கையில், அல்லது உறவினர்களிடத்திலோ சந்திக்க வருபவர்களிடத்திலோ பேசுகையில் அவற்றைப் பயன்படுத்துங்கள். துண்டுப்பிரதிகள் ஒரு சுருக்கமான சாட்சிகொடுப்பதற்கு நமக்கு வாய்ப்பளிக்கின்றன. துண்டுப்பிரதியானது ஒரு நபரைத் தொந்தரவுசெய்யாத ஒன்றாயிருக்கிறது, ஆனால் குறிப்பாகவும் சமயோசிதமாகவும் இருக்கிறது. ஒரு புத்தகத்தையோ பத்திரிகைகளையோவிட உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ஏனென்றால் வாசிப்பதற்கு அதிகமில்லை.
8 பள்ளிக்கூடம் அல்லது நீங்கள் வேலைசெய்யுமிடம், சிற்றுண்டிச்சாலைகள், பெட்ரோல் போடுமிடம் போன்ற பல இடங்களில் துண்டுப்பிரதிகளைச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது அளிக்கும் வாய்ப்புகளுக்கு விழிப்புடனிருங்கள். அவளுடைய பாட்டியை மருத்துவரிடம் எடுத்துச்செல்வதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு சகோதரி தன்னுடன் சில துண்டுப்பிரதிகளை வைத்திருந்ததை நிச்சயப்படுத்திக்கொண்டாள். மருத்துவரின் அலுவலகத்தில், கர்ப்பிணியாயிருந்த ஒருவரிடத்தில் சம்பாஷிக்கத் தொடங்கினாள். அந்தப் பெண்ணிடம் சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை துண்டுப்பிரதியைக் காண்பித்தப் பிறகு, அந்தச் சகோதரி இவ்வாறு கேட்டாள்: “இங்குப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதுபோன்ற ஓர் உலகில் உங்களுடைய பிள்ளையை வளர்க்க விரும்புகிறீர்களா?” இந்தச் சம்பாஷணையை அந்தப் பெண்ணின் வீட்டில் ஒரு சந்திப்புடன் அவள் தொடரமுடிந்தது. இது அநேக ஒழுங்கான மறு சந்திப்புகளுக்கு வழிநடத்தியது.
9 துண்டுப்பிரதிகளைக்கொண்டு பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கலாம்: வட்டாரக் கண்காணி ஒருவர் தான் சந்தித்துக்கொண்டிருந்த அந்தச் சபை, முதலில் வீட்டுக்காரரை வாழ்த்திய பிறகு துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தி, அந்த வாரத்தில் 64 வீட்டுப் பைபிள் படிப்புகளை ஆரம்பித்தது என்று அவர் அறிக்கைசெய்தார்.
10 வீட்டுக்கு வீடு சந்திப்பின் தொடக்கத்தில் ஒரு பைபிள் படிப்பையளிக்க முயற்சித்திருக்கிறீர்களா? ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு படிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை நீங்கள் சுருக்கமாக நடித்துக்காட்டுபவர்களாய் இருக்கலாம். ஒரு சகோதரி சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி இதைச் செய்தார். அந்தப் படத்தைச் சுட்டிகாண்பித்து, நம்முடைய பூமி எப்பொழுதாவது இதுபோல் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று அவள் கேட்டாள். வீட்டுக்காரர் பதிலளித்தப் பிறகு, 2 பேதுரு 3:13-ஐயும் ஏசாயா 65:17-ஐயும் வாசிப்பதற்கு அந்தச் சகோதரி அவளை அழைத்தாள்; இவை இந்தத் துண்டுப்பிரதியில் சிறப்பித்துக்காட்டப்பட்டிருக்கின்றன. பிறகு நம்முடைய சகோதரி இவ்வாறு சொன்னாள்: “இந்த வாக்குகள் எல்லாம் கனவுமல்ல ஒரு கற்பனையுமல்ல, ஆனால் உண்மையில் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.” பிறகு அவள் தொடர்ந்துவரும் வாரத்தில் சம்பாஷணையைத் தொடருவதற்கு ஏற்பாடுசெய்தாள். அடுத்தச் சந்திப்பில், அந்தப் பெண்ணின் அநேக கேள்விகள் பதிலளிக்கப்பட்டன, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகமும் அளிக்கப்பட்டது. ஒரு பைபிள் படிப்பில் விளைவடைந்தது.
11 நீங்கள் புதிதாக முழுக்காட்டப்பட்ட ஒருவரா அல்லது ஒருவேளை உங்களுடைய ஊழியத்தில் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுவருகிற ஒரு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியா? அப்படியானால், நீங்கள் அதிக அனுபவம்வாய்ந்தவர்களை நாடிச்சென்று, உங்களுடைய சபைப் பிராந்தியத்தில் துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துவதன்பேரில் அவர்களுடைய குறிப்புகளைக் கேட்க விரும்பலாம். விசுவாசத்திலுள்ள முதிர்ச்சிவாய்ந்தவர்களிடமிருந்து உற்சாகத்தையும் வழிநடத்துதலையும் பெற்றவர்களின் அநேக முன்மாதிரிகளை நாம் பைபிளில் கொண்டிருக்கிறோம்.—அப். 18:24-27; 1 கொ. 4:17.
12 விசேஷமாக சபைப் புத்தகப் படிப்பு நடத்துனர் துண்டுப்பிரதியைப் பலன்தரத்தக்க விதமாகப் பயன்படுத்துவதில் மற்றவர்கள் உங்களுக்கு உதவியளிக்க ஏற்பாடுகளைச் செய்வதில் உதவியாய் இருக்கக்கூடும். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பிரசங்க வேலையில் முன்னேற்றஞ்செய்ய உதவியளிப்பதற்கு உத்தரவாதத்தைக் கொண்டிருக்கிறார்கள். சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை துண்டுப்பிரதியை அளிப்பதற்கு ஓர் இளம் சாட்சி தன்னுடைய பெற்றோரின்மூலம் பயிற்றுவிக்கப்பட்டாள். ஒரு பைபிள் படிப்பில் தன்னுடைய தாயாரோடு இருக்கையில், அக்கறையுள்ள ஆளின் கணவருக்கு ஒரு துண்டுப்பிரதியை அவள் அளித்தாள். அந்தக் கணவர் ஓர் இளம் நபர் இப்படிப்பட்ட பலமான மத நம்பிக்கையைக் கொண்டிருப்பதைக் கண்டு மனதால் தூண்டப்பட்டார். அந்தத் துண்டுப்பிரதியை வாசிப்பதை அவர் முழுமையாக மகிழ்ந்து அனுபவித்தார். ஒவ்வொரு சமயமும் அந்த இளம்பெண் தன்னுடைய தாயாரோடு திரும்பிச்சென்றாள், அவருக்காக அவள் தயாரித்திருந்த ஒரு வசனத்தையோ பைபிள் கதையையோ பகிர்ந்துகொண்டாள். அந்த மனிதர் இப்பொழுது பத்திரிகைகளை ஒழுங்காகப் படித்து, வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தில் அக்கறையைக் காட்டியிருக்கிறார். சில கூட்டங்களுக்கு ஆஜராகியிருக்கிறார். துண்டுப்பிரதிகளை நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்வதற்கு பெற்றோர் தங்களுடைய மகளுக்குப் போதிப்பதில் தங்களுக்குரிய உத்தரவாதங்களைக் கவனிக்க நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக இவையனைத்தும் விளைவடைந்தன.
13 நம்முடைய புதிய துண்டுப்பிரதிகளைப் பலன்தரத்தக்க விதமாக பயன்படுத்துங்கள்: இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? துண்டுப்பிரதியை பயன்படுத்துகையில், நீங்கள் உங்களை அறிமுகப்படுத்தி, இவ்விதமாகச் சொல்வதன்மூலம் உங்களுடைய சம்பாஷணையை ஆரம்பிக்கலாம்: “வணக்கம். இன்றுள்ள வாழ்க்கைத் தரத்தைக்குறித்து நாங்கள் மக்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கைத் தரம் அபிவிருத்தியடையும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது அது தொடர்ந்து சீர்கேடடையுமா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] சிலர், இன்று உலகில் நடந்துகொண்டிருப்பது பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் என்றும் உலக முடிவு சமீபத்திலிருக்கிறது என்றும் நினைக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” வீட்டுக்காரர் பதிலளித்தப் பிறகு, துண்டுப்பிரதியை அளித்து இரண்டாவது பத்தியிலுள்ள மூன்று கேள்விகளுக்குக் கவனத்தைக் கொண்டுவாருங்கள். பிறகு முன்பு ஓர் உலகம் எவ்வாறு முடிவடைந்தது என்பதையும் இதுவும் எப்படி முடிவடையும் என்பதையும் காட்டுவதற்கு அந்தத் துண்டுப்பிரதியின் படிப்படியான விளக்கத்தைத் தொடருங்கள். அந்தச் சந்திப்பு முடிவடைகையில், உலக முடிவு சமீபத்திலிருக்கிறது என்பதற்கான பைபிள் அத்தாட்சியைச் சிந்திப்பதற்கு மற்றொரு சந்திப்பிற்காக ஏற்பாடுசெய்யுங்கள்.
14 அநேக சமயங்களில், வேலைசெய்யுமிடம் அல்லது பள்ளிக்கூடும் போன்ற இடங்களில் நாம் மற்றவர்களிடத்தில் ராஜ்ய செய்தியைச் சுருக்கமாக மாத்திரமே பகிர்ந்துகொள்ளும் நிலையில் நம்மைக் காண்கிறோம். நீங்கள் வேலை செய்யுமிடத்தில், அரசாங்கம் சம்பந்தமாக சமீபத்திய செய்தித் துணுக்குகளைப்பற்றி சம்பாஷணையில் வரக்கூடும். நல்ல எண்ணமுடையவர்களாக இருக்கிற தலைவர்கள் மூலம் செய்யப்படுகிற எல்லா முயற்சிகளின் மத்தியிலும், சரித்திரம் முழுவதிலும் இந்த உலகம் படுமோசமாக துன்பப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். பிறகு உலகத்தை நிஜமாகவே ஆளுவது யார்? துண்டுப்பிரதியில் பக்கம் 2-லுள்ள அடிப்பத்தியைக் குறிப்பிடுங்கள். சிந்தனையைத் தூண்டும் மூன்று கேள்விகளை வாசியுங்கள். ஒரு சுருக்கமான சம்பாஷணைக்கு நேரம் இல்லையென்றால், அந்தத் துண்டுப்பிரதியை அந்த நபர்(கள்)-க்கு கொடுத்து, மற்றொரு நேரத்தில் அல்லது இடத்தில் இந்தக் கேள்விகளைக் கலந்தாலோசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யுங்கள்.
15 தனி நபர்களாகவும் குடும்பங்களாகவும், வித்தியாசமான இந்தத் துண்டுப்பிரதிகள் ஒவ்வொன்றையும் எவ்வாறு அளிப்பது என்பதைச் சிந்திப்பதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பழகிக்கொள்ளும் நேரங்களைக் கொண்டிருங்கள். இந்த மாதத்திற்காக வெளி ஊழியத்தில் முக்கியப்படுத்திக் காட்டப்படுகிற மற்ற பிரசுரங்களோடு இந்தத் துண்டுப்பிரதிகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்? உங்களோடு சில துண்டுப்பிரதிகளைக் கொண்டுச்செல்வதற்கு நீங்கள் என்ன சந்திப்புத் திட்டங்களை மனதில் வைத்திருக்கிறீர்கள்? இந்தத் துண்டுப்பிரதிகள் அளிக்கிற காலத்திற்கேற்ற செய்தியிலிருந்து பயனடையும் ஒருவரை இந்த வாரத்தில் நீங்கள் தொடர்புகொள்வீர்களா?
16 யெகோவாவுக்கும் மக்களுக்குமான ஆழ்ந்த அன்பு, நற்செய்தி அறிவிக்கப்படுவதில் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு நம்மை உந்துவிக்கும். துண்டுப்பிரதிகளை ஒழுங்காகப் பயன்படுத்துவது அதைச் செய்வதற்கு நமக்கு உதவிசெய்யும். ஒரு சிறுவன், ஏழு வயதில், தன்னுடைய அடுத்த வீட்டிலுள்ள அயலார் புதிய ஒழுங்குமுறையில் வருவதற்கு உதவிசெய்ய விரும்பினான்; ஆகவே அவன் அவளுக்கு ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்தான், ஒரு பைபிள் படிப்பும் தொடங்கப்பட்டது. அது மிக எளிமையாக தொனிக்கிறது! ஆனால் நாம் அந்த எளிய அணுகுமுறையை நம்முடைய ஊழியத்தில் மதித்துணருகிறோமா? அடுத்த சமயத்தில் நாம் ஒரு துண்டுப்பிரதியை ஒருவருக்கு விட்டுச்செல்வோம், அது பைபிள் படிப்புக்குங்கூட வழிநடத்தக்கூடும். ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் துண்டுப்பிரதிகளை நாம் ஞானமாகப் பயன்படுத்துவோமாகில், நாம் பயனுள்ள விளைவுகளை மகிழ்ந்து அனுபவிப்பது நிச்சயம்.