உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தேசங்களுக்கு எதிரான யெகோவாவின் ஆலோசனை
    ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
    • 6 மேற்கண்ட வர்ணனைக்கு பொருத்தமாகவே ‘[எசேக்கியா] பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும் . . . முறியடித்தார்.’ (2 இராஜாக்கள் 18:⁠8) அசீரிய ராஜா சனகெரிபின் சரித்திரப் பதிவுகளின்படி பெலிஸ்தர்கள் எசேக்கியா ராஜாவின் ஆதிக்கத்திற்கு ஆளானார்கள். “எளியவர்கள்,” அதாவது பலவீனமாக்கப்பட்ட யூதா ராஜ்யம் பாதுகாப்பையும் செல்வசெழிப்பையும் அனுபவித்த அதேசமயத்தில் பெலிஸ்தியா பஞ்சத்தால் வாடியது.​—⁠ஏசாயா 14:30, 31-ஐ வாசியுங்கள்.

  • தேசங்களுக்கு எதிரான யெகோவாவின் ஆலோசனை
    ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
    • 8 பெலிஸ்தியாவைப் போன்ற சில தேசங்கள் இன்றும் கடவுளது வணக்கத்தாரை கடுமையாக எதிர்க்கின்றன. யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகள் சிறைச்சாலைகளிலும் சித்திரவதை முகாம்களிலும் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களது ஊழியம் தடை செய்யப்பட்டிருக்கிறது. அநேகர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிரிகள் தொடர்ந்து ‘நீதிமானுடைய ஆத்துமாவுக்கு எதிராக கடுமையாக தாக்குகின்றனர்.’ (சங்கீதம் 94:21, NW) அவர்களுக்கு கிறிஸ்தவர்கள் ‘எளியவர்களாக,’ ‘ஏழைகளாக’ தெரியலாம். இருந்தாலும் யெகோவாவின் துணையால் ஆன்மீக செழிப்பை அவர்கள் அனுபவிக்கிறார்கள், அவர்களது எதிரிகளே பஞ்சத்தில் தவிக்கிறார்கள். (ஏசாயா 65:13, 14; ஆமோஸ் 8:11) நவீன நாளைய பெலிஸ்தர்களுக்கு எதிராக யெகோவா தமது கையை நீட்டும்போது, இந்த “எளியவர்கள்” பாதுகாப்பாக இருப்பார்கள். யாரோடு? ‘தேவனுடைய வீட்டாரோடு.’ இவ்வீட்டிற்கு இயேசுவே அஸ்திவார மூலைக்கல்லாவார். (எபேசியர் 2:19, 20) மேலும், இயேசுவை ராஜாவாகக் கொண்ட யெகோவாவின் பரலோக ராஜ்யமாகிய ‘பரம எருசலேமின்கீழ்’ அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.​—⁠எபிரெயர் 12:22; வெளிப்படுத்துதல் 14:⁠1.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்