-
யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற கிறிஸ்தவர்களைப் போல இல்லாமல் வேறு விதமாக கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிறார்கள்?யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
-
ரொட்டியும் திராட்சமதுவும் இயேசுவின் நிஜமான உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறதென்று நம்புகிறவர்கள், சில பைபிள் வசனங்களை அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். உதாரணத்திற்கு, நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளில், “இது என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என்று இயேசு சொல்வதுபோல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (மத்தேயு 26:28) ஆனால், இயேசு சொன்ன வார்த்தைகளை இப்படியெல்லாம்கூட மொழிபெயர்க்கலாம்: “இது என்னுடைய இரத்தத்தைக் குறிக்கிறது,” “இது என்னுடைய இரத்தத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது,” “இது என்னுடைய இரத்தத்தை அடையாளப்படுத்துகிறது.”e இயேசு அடிக்கடி செய்ததுபோல இந்தச் சமயத்திலும் உருவக அணியைப் பயன்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார்.—மத்தேயு 13:34, 35.
-