உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 ஜனவரி பக். 2-16
  • ஜனவரி 5-11

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 5-11
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 ஜனவரி பக். 2-16

ஜனவரி 5-11

ஏசாயா 17-20

பாட்டு 153; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “நம்மைக் கொள்ளையடிப்பவர்களின் கதி”

(10 நிமி.)

உலக மக்கள் கொந்தளிக்கிற கடல் மாதிரி இருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது (ஏசா 17:12; w18.06 பக். 7 பாரா 16)

நாம் நடுநிலையாக இருப்பதால் இந்த உலகம் நம்மை மோசமாக நடத்தும் என்று எதிர்பார்க்கலாம் (யோவா 15:18, 19; w16.04 பக். 28 பாரா 4)

‘நம்மைக் கொள்ளையடிக்கிற’ ஆட்களிடமிருந்து யெகோவா நம்மை சீக்கிரத்தில் காப்பாற்றுவார் (ஏசா 17:13, 14; ip-1 பக். 198 பாரா 20)

ஜெயிலில் இருக்கும் ஒரு சகோதரர், உருக்கமாக ஜெபம் செய்கிறார். அவருடைய அறைக்கு வெளியே, கையில் துப்பாக்கியோடு ஒரு காவலர் நிற்கிறார்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 20:2—ஏசாயா உண்மையிலேயே மூன்று வருஷங்களுக்கு வெற்று உடம்போடு நடமாடிக்கொண்டிருந்தாரா? (w06 12/1 பக். 11 பாரா 1)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 19:1-12 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். கல்யாணமான ஒருவரிடம் அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 4)

6. பேச்சு

(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 14—பொருள்: தன்னிடம் ஜெபம் செய்யும்படி கடவுள் நம்மிடம் சொல்கிறார். (th பாடம் 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 148

7. “உனக்குக் கோட்டை போலவும் கற்பாறை போலவும் இருக்கிறவரை நினைத்துப் பார்”

(10 நிமி.) கலந்துபேசுங்கள்.

யெகோவா நமக்குக் கோட்டை போலவும் கற்பாறை போலவும் இருக்கிறார். (ஏசா 17:10) அவரிடம் அடைக்கலம் தேடிப் போகும்போது நம்மைக் காப்பாற்றுகிறார். (சங் 144:1, 2) நமக்கு வரும் எதிர்ப்புகளை யெகோவா எப்போதுமே தடுத்து நிறுத்துவதில்லை. ஆனால், அவற்றைச் சகித்திருக்க தேவையானதையெல்லாம் நமக்கு எப்போதுமே கொடுக்கிறார்.—1கொ 10:13.

“யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—அனனியா, மீஷாவேல், அசரியா” என்ற வீடியோவில் வரும் ஒரு காட்சி: நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்திய சிலையை வணங்காமல் அனனியா, மீஷாவேல் மற்றும் அசரியா நிற்கிறார்கள். நேபுகாத்நேச்சார் கோபமாக தன் வீரர்களிடம் அவர்களைப் பிடிக்கும்படி சொல்கிறார்.

நாம் யெகோவாவை நினைத்துப் பார்ப்பதற்கான ஒரு வழி, அவருக்குக் கீழ்ப்படிவது. யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—அனனியா, மீஷாவேல், அசரியா என்ற வீடியோவைக் காட்டுங்கள். சில பிள்ளைகளை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து அவர்களை மேடைக்கு அழைத்து இப்படிக் கேளுங்கள், அல்லது சபையாரிடம் இப்படிக் கேளுங்கள்:

  • யெகோவா தன் நண்பர்களை எப்படிக் காப்பாற்றினார்?—தானி 3:24-28

  • யெகோவாவின் நண்பர்களாக இருந்ததை அனனியாவும் மீஷாவேலும் அசரியாவும் எப்படிக் காட்டினார்கள்?

  • யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது உங்களுக்கு எப்போது கஷ்டமாக இருக்கிறது?

  • யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?

8. யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தினமும் நேரம் ஒதுக்குங்கள்

(5 நிமி.) கலந்துபேசுங்கள்.

“யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்” வீடியோ தொடரில் வரும் பைபிள் கதாபாத்திரங்களின் ஒரு தொகுப்பு. அவர்களுக்கு முன்பு ஒரு பெரிய பைபிள் இருக்கிறது. அதோடு, அந்த வீடியோ தொடரைத் தொகுத்து வழங்கும் நபரும் இருக்கிறார்.

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள் என்ற வீடியோ தொடர் எழுதப் படிக்க கற்றுக்கொள்ளும் பிள்ளைகளுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. யெகோவாமேல் அன்பு காட்டியவர்களைப் பற்றி அது கற்றுக்கொடுக்கிறது. இந்தத் தொடரில் வரும் ஒவ்வொரு வீடியோவும், “யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தினமும் நேரம் ஒதுக்கும்படி” பிள்ளைகளை உற்சாகப்படுத்துகிறது.

  • யெகோவாவையும் அவருடைய நண்பர்களையும் பற்றிக் கற்றுக்கொள்ள நீங்கள் எப்படித் தினமும் நேரம் ஒதுக்கலாம்?

  • பைபிளில் வரும் யாரைப் பற்றியெல்லாம் அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள், ஏன்?

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடம் 50, பகுதி 9—முன்னுரை, பாடம் 51

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 73; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்