உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 ஜனவரி பக். 4-5
  • ஜனவரி 12-18

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 12-18
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 ஜனவரி பக். 4-5

ஜனவரி 12-18

ஏசாயா 21-23

பாட்டு 120; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. செப்னாவுக்கு நடந்ததிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்

(10 நிமி.)

பொறுப்புகள் கிடைக்கும்போது மனத்தாழ்மையாக இருங்கள் (ஏசா 22:15-19; w18.03 பக். 25 பாரா. 7-9)

உங்களுடைய பொறுப்பை நீங்கள் இழந்தாலும், யெகோவாவுக்குத் தொடர்ந்து உங்களுடைய சிறந்ததைக் கொடுக்க தீர்மானமாக இருங்கள் (ஏசா 36:3; w18.03 பக். 26 பாரா 10)

ஒரு பெற்றோராக அல்லது ஒரு மூப்பராக பைபிளிலிருந்து நீங்கள் கண்டித்துத் திருத்தும்போது, செப்னாவிடம் யெகோவா நடந்துகொண்ட மாதிரியே நடந்துகொள்ளுங்கள் (w18.03 பக். 26 பாரா 11)

படங்களின் தொகுப்பு: ஒரு சகோதரருக்கு அன்பான ஆலோசனை கிடைக்கிறது, அது அவரைச் செதுக்கி சீராக்குகிறது. 1. இரண்டு மூப்பர்கள் கொடுக்கும் ஆலோசனையை ஏற்றுக்கொள்வது அவருக்குக் கஷ்டமாக இருக்கிறது. 2. அவர் பைபிளைப் படித்து யோசித்துப் பார்க்கிறார். 3. அவருக்கு ஆலோசனை கொடுத்த ஒரு மூப்பரோடு சேர்ந்து சந்தோஷமாக ஊழியம் செய்கிறார்.

நமக்குக் கிடைக்கும் அன்பான கண்டிப்பு, யெகோவா நம்மைச் செதுக்கி சீராக்குவதற்கான ஒரு வழி

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 21:1—பாபிலோன் ஏன் ‘கடல் வனாந்தரம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது? (w06 12/1 பக். 11 பாரா 2)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 23:1-14 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(1 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிளைப் பற்றிப் பேசாமல் நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை நீங்கள் சந்திக்கும் நபருக்கு இயல்பான விதத்தில் சொல்லுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)

5. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 3)

6. மறுபடியும் சந்திப்பது

(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். அந்த நபர் பிஸியாக இருக்கிறார். (lmd பாடம் 7 குறிப்பு 4)

7. பேச்சு

(5 நிமி.) ijwyp கட்டுரை 71—பொருள்: யார் என்னுடைய ரோல் மாடல்? (th படிப்பு 9)

ஒரு சிக்கலான பாதைக்கு மேலே ஒரு பாலம் போடப்பட்டிருக்கிறது. அந்தப் பாலத்தில் ஒருவர் இன்னொருவரை அழைத்து செல்கிறார். மற்றவர்கள் அந்தப் பாலத்துக்கு கீழே இருக்கும் சிக்கலான பாதையில் வழி தேடி அலைகிறார்கள்.

நல்ல ரோல் மாடல் இருந்தால் உங்களுடைய லட்சியங்களை நீங்கள் சீக்கிரம் அடையலாம்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 124

8. சபைத் தேவைகள்

(15 நிமி.)

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 52-53

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 3; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்