பிப்ரவரி 23–மார்ச் 1
ஏசாயா 38-40
பாட்டு 4; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பூர்வ இஸ்ரவேலில் ஒரு மேய்ப்பர் தன்னுடைய ஆட்டுக்குட்டியைத் தோளில் வைத்து பாசமாகக் கட்டிப்பிடித்திருக்கிறார்
1. “ஒரு மேய்ப்பனைப் போல அவர் தன்னுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வார்”
(10 நிமி.)
யெகோவா பைபிளை நமக்கு ஒரு பரிசாகத் தந்திருக்கிறார், அதைப் பாதுகாத்தும் வந்திருக்கிறார். அவரிடம் நெருங்கிப்போக பைபிள் நமக்கு உதவுகிறது (ஏசா 40:8; w23.02 பக். 2-3 பாரா. 3-4)
அவர் நம்மை ரொம்ப அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார் (ஏசா 40:11; cl பக். 70 பாரா 7)
அவர் நம் ஒவ்வொருவரையும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். பிரச்சினைகளைச் சமாளிக்க நமக்கு உதவி செய்கிறார் (ஏசா 40:26-29; w18.01 பக். 8 பாரா. 4-6)
யோசித்துப் பாருங்கள்: ஒரு மேய்ப்பராக யெகோவா என்னவெல்லாம் செய்கிறார் என்று ஏசாயா 40:11-ல் சொல்லியிருப்பதைப் படிக்கும்போது உங்கள் மனதுக்கு எப்படி இருக்கிறது?
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 40:3—கி.பி. 29-ல் இந்த வார்த்தைகள் எப்படி நிறைவேறின? (ip-1 பக். 400 பாரா 7)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 40:21-31 (th படிப்பு 11)
4. பேச ஆரம்பிப்பது
(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சமீபத்தில் கூட்டத்தில் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவரிடம் சொல்ல முயற்சி செய்யுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 3)
5. பேச ஆரம்பிப்பது
(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிளைப் பற்றி நீங்கள் சொல்லிக்கொடுப்பீர்கள் என்பதை ஒருவருக்குத் தெரியப்படுத்த முயற்சி செய்யுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 4)
6. மறுபடியும் சந்திப்பது
(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 5)
7. சீஷர்களை உருவாக்குவது
(5 நிமி.) lff பாடம் 18 சுருக்கம், ஞாபகம் வருகிறதா?, மற்றும் குறிக்கோள். “அலசிப் பாருங்கள்” பகுதியில் இருக்கும் ஒரு கட்டுரையைப் பயன்படுத்தி, யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருக்கும் அன்பைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள உங்கள் மாணவருக்கு உதவி செய்யுங்கள். (lmd பாடம் 11 குறிப்பு 3)
பாட்டு 160
8. வருடாந்தர ஊழிய அறிக்கை
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
வருடாந்தர ஊழிய அறிக்கை சம்பந்தமாக கிளை அலுவலகம் அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசியுங்கள். உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய 2025 ஊழிய ஆண்டு அறிக்கையில் இருக்கும் மற்ற நல்ல விஷயங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். பின்பு, கடந்த வருஷம் ஊழியத்தில் அருமையான அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள்; அவர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுங்கள்.
Based on NASA/Visible Earth imagery
2025-ல், யெகோவாவின் மக்கள் தொடர்ந்து மும்முரமாக வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தார்கள், பைபிள் படிப்புகளையும் நடத்தினார்கள்
2025 ஊழிய ஆண்டு அறிக்கையில் என்ன நல்ல விஷயங்களை நீங்கள் கவனித்தீர்கள்?
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 64-65