பிப்ரவரி 16-22
ஏசாயா 36-37
பாட்டு 150; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. ‘அவர்கள் என்னை நிந்தித்துப் பேசியதைக் கேட்டு நீங்கள் பயப்படாதீர்கள்’
(10 நிமி.)
யெகோவாவின் மக்களைப் பயமுறுத்த ரப்சாக்கே எருசலேமுக்குப் போனான் (ஏசா 36:1, 2; it “எசேக்கியா” எண் 1 பாரா 14)
அவர்களை சோர்ந்துபோக வைக்க முயற்சி செய்தான் (ஏசா 36:8; ip-1 பக். 387 பாரா 10)
யெகோவாமீதும் எசேக்கியா ராஜாமீதும் அவர்கள் நம்பிக்கை வைத்ததை அவன் கேலி செய்தான் (ஏசா 36:7, 18-20; ip-1 பக். 388 பாரா. 13-14)
யெகோவாவின் மக்கள் மற்றவர்களுடைய மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட வேண்டியதில்லை.—ஏசா 37:6, 7
குடும்ப வழிபாட்டுக்கு ஐடியா: ‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’ என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, அதில் கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 37:29—எந்த அர்த்தத்தில் சனகெரிப் ராஜாவின் வாயில் யெகோவா கடிவாளம் போட்டார்? (it “கடிவாளம்” பாரா 4)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 37:14-23 (th படிப்பு 2)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 4)
5. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 3 குறிப்பு 5)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(5 நிமி.) நடிப்பு. ijwbq கட்டுரை 110 பாரா. 1-4—பொருள்: ஞானஸ்நானம் என்றால் என்ன? (th படிப்பு 17)
பாட்டு 118
7. நீங்கள் நம்புவது உண்மைதான் என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
கடவுள்மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பற்றி... பைபிளை நீங்கள் நம்புவதைப் பற்றி... யெகோவாவின் சாட்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எடுத்திருக்கும் முடிவைப் பற்றி... யாராவது கேள்வி கேட்டிருக்கிறார்களா அல்லது கேலி செய்திருக்கிறார்களா? அப்போது உங்களுக்குப் பயமாக அல்லது பதட்டமாக இருந்திருக்கலாம். மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும்போது நமக்கு சந்தேகங்கள்கூட வர ஆரம்பித்துவிடலாம். அதைத் தவிர்க்க நாம் என்ன செய்யலாம்?
ஏசாயா 36:4-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
நாம் நம்புவது உண்மைதான் என்பதை உறுதி செய்துகொள்வது ஏன் முக்கியம்?
டீனேஜில் நான்—கடவுளை நம்புவதில் அர்த்தம் இருக்கிறதா? என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
எலிபால்டோவும் கிறிஸ்டெலும் தங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்த என்ன செய்தார்கள்?
கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் ஏன் உறுதியாக நம்புகிறீர்கள்?
எந்த பைபிள் வசனங்களை வைத்து இதையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்கள்?
யெகோவா உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார்
யெகோவா எப்போதுமே உங்களுக்கு உதவி செய்வார்
யார் உண்மையிலேயே கடவுளுடைய மக்கள் என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள்
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 62-63