மார்ச் 23-29
ஏசாயா 48-49
பாட்டு 89; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. யெகோவா சொல்லித்தருவதைக் கேட்டு அதன்படி நடங்கள்
(10 நிமி.)
யெகோவா தன் ஊழியர்களுக்குச் சொல்லித்தருகிறார் (ஏசா 48:17; it “போதகர், கற்றுக்கொடுத்தல்” பாரா 2)
யெகோவா சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும் (ஏசா 48:18அ; ijwbq கட்டுரை 44 பாரா. 2-3)
அப்போது நம் சமாதானம் “ஆற்றைப் போலவும்” நம் நீதி “கடல் அலைகளைப் போலவும்” இருக்கும் (ஏசா 48:18ஆ; lv பக். 227 பாரா 8)
வார்த்தையின் விளக்கம்: “சமாதானம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை ஆரோக்கியம், பாதுகாப்பு, பலம், நட்பு, எந்தக் குறையும் இல்லாத நிறைவு போன்றவற்றையும் குறிக்கலாம்.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 49:8—இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி மூன்று விதங்களில் நிறைவேறியது? (it “அனுக்கிரகக் காலம்” பாரா. 1-3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 48:9-20 (th படிப்பு 11)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. செயலற்றவராக இருக்கும் உங்கள் குடும்பத்தார் அல்லது சொந்தக்காரர் ஒருவரை விசேஷப் பேச்சுக்கும் நினைவுநாள் நிகழ்ச்சிக்கும் அழையுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சந்தர்ப்ப சாட்சியில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். அவர் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நினைக்கிறார். அந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என்பதை அவருக்கு விளக்குங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)
6. மறுபடியும் சந்திப்பது
(5 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. ஆர்வமுள்ள ஒருவர் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். நினைவுநாள் பேச்சு முடிந்த பிறகு, அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)
பாட்டு 107
7. வருஷத்தின் ரொம்ப முக்கியமான நாளிலிருந்து நன்மையடைய நீங்கள் என்ன செய்யலாம்?
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
ஒவ்வொரு வருஷமும் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம், யெகோவா கொடுத்த மீட்புவிலை என்ற பரிசுக்கு நன்றி காட்டுகிறோம். (லூ 22:19) அதேநேரத்தில், யெகோவாவும் இயேசுவும் நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை நினைவுநாள் நிகழ்ச்சி நமக்கு ஞாபகப்படுத்துகிறது. (கலா 2:20; 1யோ 4:9, 10) யெகோவா செய்திருக்கும் இந்த ஏற்பாட்டிலிருந்து நாம் எப்படி முழுமையாக நன்மையடையலாம்? ஆர்வம் காட்டுகிறவர்களும் நன்மையடைய நாம் எப்படி அவர்களுக்கு உதவி செய்யலாம்?
நினைவுநாள் பைபிள் வாசிப்பில் இருக்கும் வசனங்களைத் தினமும் படித்து ஆழமாக யோசித்துப் பாருங்கள்
மீட்புவிலை என்ற பரிசைப் பற்றியும், அதற்கு நன்றி காட்டும் விதத்தில் எப்படி வாழலாம் என்பதைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள்
உங்களுக்குத் தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள், உங்கள் பகுதியில் இருப்பவர்கள் என எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும் விசேஷப் பேச்சுக்கும் நினைவுநாள் நிகழ்ச்சிக்கும் கூப்பிடுங்கள்
நினைவுநாளுக்கு வருபவர்களைச் சிரித்த முகத்தோடு அன்பாக வரவேற்க மறந்துவிடாதீர்கள். நீங்கள் அழைத்தவர்களை நீங்கள் விசேஷமாக கவனிப்பீர்கள் என்பது உண்மைதான். ஆனால், புதிதாக வரும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய தயாராக இருங்கள். அவர்களை உங்கள் பக்கத்தில் உட்காரும்படி சொல்லலாம்
வந்திருப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரமெடுத்து பதில் சொல்லுங்கள்
செயலற்ற பிரஸ்தாபிகளை வரவேற்க தயாராக இருங்கள். முக்கியமாக, முன்பு யெகோவாவின் சாட்சிகளாக இருந்தவர்களை வரவேற்க மூப்பர்கள் தயாராக இருக்க வேண்டும்
“வழிதவறிப்போனவர்களைத் தேடுவதற்கும் மீட்பதற்குமே” இயேசு வந்தார் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
செயலற்றவர்கள் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வரும்போது அவர்களை அன்போடு வரவேற்பது ஏன் முக்கியம்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 72-73