ஏப்ரல் 27–மே 3
ஏசாயா 56-57
பாட்டு 12; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. யெகோவா நம் கடவுளாக இருப்பதில் நமக்கு எவ்வளவு சந்தோஷம்!
(10 நிமி.)
சிலைகளை வணங்குகிறவர்களுடைய கதறல்கள் கேட்கப்படாது (ஏசா 57:13; ip-2 பக். 269 பாரா. 14-16)
யெகோவாவை வணங்காதவர்களிடம் சமாதானம் இருக்காது; அவர்களுக்குள் பிரிவினைதான் இருக்கும் (ஏசா 57:20; w18.06 பக். 7 பாரா 16)
கெட்டவர்களுக்கு நிம்மதியே இருக்காது (ஏசா 57:21; it “நிம்மதி” பாரா 3)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவோடு நெருக்கமாக இருப்பது என் வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக ஆக்கும்?’
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 56:6, 7—இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறி வருகிறது? (w07 1/15 பக். 10 பாரா 3; w06 11/1 பக். 27 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 56:4-12 (th படிப்பு 5)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சமீபத்தில் கூட்டத்தில் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)
5. நம்பிக்கைகளை விளக்குவது
(5 நிமி.) பேச்சு. ijwbq கட்டுரை 90—பொருள்: ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மதத்தில் இருப்பது முக்கியமா? (th படிப்பு 16)
6. சீஷர்களை உருவாக்குவது
(4 நிமி.) lff பாடம் 19 குறிப்பு 4 (lmd பாடம் 11 குறிப்பு 3)
பாட்டு 58
7. யெகோவாவைப் பற்றிப் பேசுவதை நிறுத்தாதீர்கள்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
யெகோவாவை வணங்காத ஒருவரால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது, அவருடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்காது, எதிர்காலத்தைப் பற்றி எந்த நம்பிக்கையும் இருக்காது. இருந்தாலும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அவர்கள் கேட்பதில்லை, அந்தச் செய்தியால் அவர்களுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதையும் புரிந்துகொள்வதில்லை. நாம் சொல்கிற செய்தியை மக்கள் கேட்கவில்லை என்றாலும், நாம் ஏன் சோர்ந்துபோக வேண்டியதில்லை என்பதற்கு சில காரணங்களைப் பார்க்கலாம்.—பிர 11:6.
நம்முடைய ஊழியப் பகுதியில் நிறைய மாற்றங்கள் நடக்கின்றன. நம் செய்தியை கேட்காத வீட்டுக்காரர்கள் வேறு இடத்துக்கு மாறிப் போகலாம், புதிதாகக் குடிமாறி வருகிறவர்கள் நாம் சொல்வதைக் கேட்கலாம்
வேறொரு நபர் கதவைத் திறக்கலாம். அது வயதான பெற்றோராகவோ அவர்களுடைய வளர்ந்த பிள்ளையாகவோ அந்தக் குடும்பத்தில் புதிதாக வந்தவராகவோ அல்லது அந்த வீட்டுக்கு விருந்தாளியாக வந்தவராகவோ இருக்கலாம்
மக்களின் மனநிலை மாறுகிறது. (1தீ 1:13) உலக நிலைமைகள் மோசமாவதாலோ, அந்த நபருடைய வாழ்க்கையில் நடந்த சோக சம்பவத்தாலோ இப்போது நாம் சொல்லும் செய்தியை அவர் கேட்கலாம்
நம்முடைய விடாமுயற்சி யெகோவாமேல் நாம் வைத்திருக்கும் அன்பைக் காட்டும்.—லூ 6:45; 1யோ 5:3
யெகோவா “ஒருவருக்கும் தூரமானவராக இல்லை” என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
ஊழியத்தில் விடாமுயற்சியோடு இருப்பது சம்பந்தமாக நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 80-81