உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 மார்ச் பக். 12-13
  • ஏப்ரல் 20-26

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 20-26
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 மார்ச் பக். 12-13

ஏப்ரல் 20-26

ஏசாயா 54-55

பாட்டு 86; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. எதை வேண்டுமானாலும் விலையாகக் கொடுப்பீர்களா?

(10 நிமி.)

தன் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார் (ஏசா 54:13; w09 9/15 பக். 21 பாரா 3)

நம் நேரத்தைக் கொடுத்து சத்தியத்தை வாங்க வேண்டும் (ஏசா 55:1, 2; w18.11 பக். 4-5 பாரா. 6-7)

கவனித்துக் கேட்பதற்கு முயற்சி தேவை; ஆனால், அது நம் உயிரைக் காப்பாற்றும் (ஏசா 55:3; be பக். 14 பாரா. 3-5)

சபைக் கூட்டத்தில் பதில் சொல்வதற்காக ஒரு சகோதரர் தன் கையைத் தூக்குகிறார்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘தனிப்பட்ட படிப்பை நான் எப்படி இன்னும் நன்றாகச் செய்யலாம்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 54:17—இந்த வசனத்தின் முதல் பாகம் என்ன மூன்று முக்கியமான உண்மைகளை நமக்கு ஞாபகப்படுத்துகிறது? (w19.01 பக். 6 பாரா. 14-15)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 54:1-10 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 4)

5. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)

6. மறுபடியும் சந்திப்பது

(2 நிமி.) பொது ஊழியம். பொது ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தித்து கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)

7. பேச்சு

(5 நிமி.) be பக். 28 பாரா 3–பக். 31 பாரா 2—பொருள்: எப்படி படிப்பது? (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 97

8. தனிப்பட்ட படிப்புக்கு வரும் தடைகளைத் தாண்டுங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

ஒரு அம்மா விடியற்காலையில் எழுந்து தன் மகள் தூங்கிக்கொண்டிருக்கும்போதே பைபிள் படிக்கிறார்.

தனிப்பட்ட படிப்பை தவறாமல் படிப்பது ஒரு பெரிய சவால்தான். ஒருவேளை, இப்படிக் கற்பனை செய்து பாருங்கள்: ஒரு சகோதரருக்கோ சகோதரிக்கோ தனிப்பட்ட படிப்பை தவறாமல் படிப்பதும் தினமும் பைபிள் வாசிப்பதும் கஷ்டமாக இருக்கிறது. அவருக்கு உதவி செய்ய நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். அவருக்கு இருக்கும் சில தடைகளை உங்களிடம் சொல்கிறார். ஒவ்வொரு தடைக்குக் கீழேயும் குறைந்தது ஒரு ஆலோசனையை, ஒரு பைபிள் நியமத்தை, அல்லது ஒரு பிரசுரத்தில் வந்த தகவலை எழுதுங்கள்.

  • “எனக்கு சரியாகப் படிக்க வராது”

  • “எனக்குப் படிக்க பிடிக்காது”

  • “பைபிளில் எங்கிருந்து படிக்க ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஒரு நாளுக்கு எவ்வளவு படிக்க வேண்டும் என்றும் தெரியவில்லை”

  • “படிப்பதற்கு எக்கச்சக்கமாக இருக்கிறது! வாராவாரம் நான் எதைத்தான் படிப்பது?”

  • “தலைக்குமேல் வேலை இருக்கிறது, இதில் படிப்பதற்கு நான் எங்கே நேரத்தைக் கண்டுபிடிப்பது!”

  • “கவனம் செலுத்துவது எனக்கு ரொம்ப கஷ்டம், சிலசமயம் படித்த உடனே நான் மறந்துவிடுகிறேன்”

ஆழமாகப் படிப்பது என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • தனிப்பட்ட படிப்பை இன்னும் நன்றாகப் படிக்க வீடியோவில் வந்த என்னென்ன ஆலோசனைகள் உங்களுக்குப் பிடித்திருந்தது?

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 78-79

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 70; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்