பைபிள் போதனை
“ஆன்மீக அன்பளிப்பை” பயன்படுத்துங்கள்
சகோதர சகோதரிகளோடு நேரம் செலவு செய்யும்போது, ஒருவருக்கு ஒருவர் கிடைக்கிற உற்சாகமும் பலமும் ஒரு பொக்கிஷம்! ஆனால், அப்படி உற்சாகம் கிடைக்க வேண்டுமென்றால், ஒருவரோடு ஒருவர் நேரம் செலவு செய்வதோடு இன்னும் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த நமக்கு இருக்கும் திறமையை ‘ஆன்மீக அன்பளிப்பு’ என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 1:11, 12; அடிக்குறிப்பு) இந்த அன்பளிப்பை நாம் எப்படி மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்?
பலப்படுத்தும் வார்த்தைகளை அன்பளிப்பாக கொடுங்கள். உதாரணத்துக்கு, கூட்டங்களில் பதில் சொல்வதை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், நம்முடைய கருத்துகளையோ அனுபவங்களையோ அதிகமாக சொல்லாமல், யெகோவாவைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் அவருடைய மக்களைப் பற்றியும் அதிகமாக சொல்லலாம். சகோதர சகோதரிகளிடம் பேசும்போது, அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும் விஷயங்களைப் பேசலாம்.
உங்கள் முடிவுகள் மற்றும் செயல்கள் மூலமாக மற்றவர்களுக்கு அன்பளிப்பு கொடுங்கள். உதாரணத்துக்கு, சவால்கள் இருந்தாலும் முழுநேர சேவையை நீங்கள் செய்வதைப் பார்த்து மற்றவர்கள் உற்சாகம் பெறலாம். நீங்கள் செய்யும் வேலை அதிகமான நேரத்தை உறிஞ்சிக்கொண்டாலும் அல்லது உங்களுக்கு உடம்பு முடியாமல் இருந்தாலும் நீங்கள் வாரநாள் கூட்டத்துக்கு வருவதைப் பார்த்து அவர்கள் பலம் பெறலாம்.
உங்கள் வார்த்தைகள் மற்றவர்களைப் பலப்படுத்துகிறதா? மற்றவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் ஆன்மீக அன்பளிப்புகளைத் தவறவிடாமல் இருக்கிறீர்களா? அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?