படிக்க டிப்ஸ்
பைபிள் சம்பவங்களைக் காட்சியாக ஓடவிடுங்கள்
நிறைய உண்மை சம்பவங்கள் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவை நமக்கு முக்கியமான பாடங்களைக் கற்றுத்தருகின்றன. அந்தப் பதிவுகளைக் காட்சிகளாக மனதில் ஓடவிட்டால், அவற்றை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அதிக நன்மையும் நமக்குக் கிடைக்கும். அதைச் செய்ய சில டிப்ஸ்:
சத்தமாக வாசியுங்கள். சத்தமாக வாசித்தால் காட்சிகளை மனதில் தெளிவாகப் பார்க்க முடியும். நீங்கள் குடும்பமாக பைபிளை வாசிக்கிறீர்கள் என்றால், ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். அப்போது அந்தப் பதிவுகளைக் கண் முன்னால் கொண்டுவர முடியும்.
கற்பனை செய்யுங்கள். கதாபாத்திரத்தின் யோசனைகளையும் உணர்வுகளையும் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இவர் ஏன் இப்படிப் பேசினார்? ஏன் இப்படி நடந்துகொண்டார்? அவருடைய இடத்தில் இருந்திருந்தால் எனக்கு எப்படி இருந்திருக்கும்?’
வரைந்து பாருங்கள். பைபிள் பதிவுகளை வரைந்து பார்த்தால், அவற்றைக் கற்பனை செய்யவும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் முடியும். நீங்கள் வரைவது அழகான ஓவியமாக இல்லையென்றாலும் பரவாயில்லை.