படிப்பு ப்ராஜெக்ட்
யெகோவாவின் காக்கும் வல்லமையை முழுமையாக நம்புங்கள்
எண்ணாகமம் 13:25–14:4-ஐ வாசித்து, இஸ்ரவேலர்களுக்கு யெகோவாமேல் எப்படி நம்பிக்கை இல்லாமல் போனது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அலசிப் பாருங்கள். யெகோவாவால் தங்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எகிப்தைவிட்டு கிளம்பியபோதே இஸ்ரவேலர்களுக்கு ஏன் இருந்திருக்க வேண்டும்? (சங். 78:12-16, 43-53) யெகோவாமேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதற்கு எது காரணமாக இருந்தது? (உபா. 1:26-28) யோசுவாவும் காலேபும் யெகோவாமேல் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார்கள்?—எண். 14:6-9.
ஆழமாகத் தோண்டிப் பாருங்கள். யெகோவாமேல் இருந்த நம்பிக்கையை அதிகமாக்க இஸ்ரவேலர்கள் என்ன செய்திருக்கலாம்? (சங். 9:10; 22:4; 78:11) யெகோவாமேல் மரியாதை இருந்தால் அவர்மேல் நம்பிக்கை வரும் என்று ஏன் சொல்லலாம்?—எண். 14:11.
பாடம். உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:
‘யெகோவாவை முழுமையாக நம்புவது எப்போதெல்லாம் எனக்குக் கஷ்டமாக இருக்கலாம்?’
‘இப்போதும் எதிர்காலத்திலும் யெகோவாவை முழுமையாக நம்ப நான் என்ன செய்யலாம்?’
‘மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும் சமயத்தில், எந்த விஷயத்தை நான் முழுமையாக நம்பலாம்?’—லூக். 21:25-28.