-
யாத்திராகமம் 35:5-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 ‘நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவர வேண்டும்.+ யெகோவாவுக்கு உள்ளப்பூர்வமாகக் காணிக்கை கொடுக்க விரும்புகிறவர்கள்+ இதையெல்லாம் கொண்டுவரலாம்: தங்கம், வெள்ளி, செம்பு, 6 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை,* வெள்ளாட்டு மயிர்,+ 7 சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோல், கடல்நாய்த் தோல், வேல மரம், 8 விளக்குகளுக்கான எண்ணெய், அபிஷேகத் தைலத்துக்கும் தூபப்பொருளுக்கும் தேவையான பரிமளத் தைலம்,+ 9 ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும்+ பதிக்க வேண்டிய கோமேதகக் கற்கள்+ மற்றும் பல ரத்தினக் கற்கள்.
-
-
நீதிமொழிகள் 3:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 உன்னுடைய மதிப்புமிக்க பொருள்களையும்,+
உன்னுடைய முதல் விளைச்சல்கள் எல்லாவற்றையும்* கொடுத்து
யெகோவாவை மகிமைப்படுத்து.+
-