32 இப்படி, வழிபாட்டுக் கூடாரத்துக்கான எல்லா வேலைகளும், அதாவது சந்திப்புக் கூடாரத்துக்கான எல்லா வேலைகளும், செய்து முடிக்கப்பட்டன. மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.+ அவர் சொன்னபடியே செய்தார்கள்.
9 அன்றைக்கு இருந்த கூடாரம், இந்தக் காலத்துக்கு அடையாளமாக இருக்கிறது.+ அந்த ஏற்பாட்டின்படி, காணிக்கைகளும் பலிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.+ ஆனாலும், அவற்றைக் கொடுக்கிறவர்களுக்கு* அவற்றால் குற்றமில்லாத மனசாட்சியைத் தர முடிவதில்லை.+