உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 26:1-6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 பின்பு அவர், “வழிபாட்டுக் கூடாரத்தை+ 10 விரிப்புகளால் அமைக்க வேண்டும். உயர்தரமான திரித்த நாரிழை,* நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் இந்த விரிப்புகளைச் செய்ய வேண்டும். இந்த விரிப்புகள்மேல் கேருபீன்களின்+ வடிவத்தில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும்.+ 2 ஒவ்வொரு விரிப்பும் 28 முழ* நீளத்திலும், 4 முழ அகலத்திலும் இருக்க வேண்டும். எல்லா விரிப்புகளும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.+ 3 ஐந்து விரிப்புகளை ஒன்றாகவும் மற்ற ஐந்து விரிப்புகளை ஒன்றாகவும் இணைக்க வேண்டும். 4 இணைக்கப்பட்ட ஒரு விரிப்பின் ஓரத்தில் நீல நிற நூலால் காதுகளை* தைக்க வேண்டும்; இணைக்கப்பட்ட மற்றொரு விரிப்பின் ஓரத்திலும் அதேபோல் காதுகளைத் தைக்க வேண்டும். இந்த இரண்டு விரிப்புகளையும் சேர்ப்பதற்காக இப்படிச் செய்ய வேண்டும். 5 ஒவ்வொரு விரிப்பிலும் 50 காதுகளைத் தைக்க வேண்டும். ஒரு விரிப்பிலுள்ள காதுகள் மற்ற விரிப்பின் ஓரத்திலுள்ள காதுகளோடு இணையும்படி நேருக்கு நேர் இருக்க வேண்டும். 6 தங்கத்தில் 50 கொக்கிகள் செய்து, அவற்றால் அந்த இரண்டு விரிப்புகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். அப்போது, முழு கூடாரமும் ஒரே விரிப்பால் அமைக்கப்பட்டதாக இருக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்