-
யாத்திராகமம் 38:9-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அதன்பின், பிரகாரத்தை அமைத்தார்.+ பிரகாரத்தின் தெற்குப் பக்கத்துக்காக, உயர்தரமான திரித்த நாரிழையில்* 100 முழத்துக்கு மறைப்புகளைச் செய்தார்.+ 10 செம்பினால் செய்யப்பட்ட 20 பாதங்களின் மேல் 20 கம்பங்களை நிறுத்தினார். கம்பங்களுக்காக வெள்ளியால் கொக்கிகளையும் இணைப்புகளையும்* செய்தார். 11 வடக்குப் பக்கத்துக்கான மறைப்புகளையும் 100 முழத்தில் செய்தார். அவற்றுக்கான 20 கம்பங்களையும் 20 பாதங்களையும் செம்பினால் செய்தார். கம்பங்களுக்கான கொக்கிகளையும் இணைப்புகளையும் வெள்ளியால் செய்தார்.
-