உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 13:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதன்பின் மோசே ஜனங்களிடம், “எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து* விடுதலையான இந்த நாளை நீங்கள் நினைவில் வையுங்கள்.+ யெகோவா தன்னுடைய கைபலத்தால் உங்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.+ அதனால், புளிப்பு சேர்க்கப்பட்ட எதையுமே நீங்கள் சாப்பிடக் கூடாது.

  • யாத்திராகமம் 13:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அந்த நாளில் உங்கள் மகன்களிடம், ‘யெகோவா எங்களை எகிப்திலிருந்து எப்படி விடுதலை செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கத்தான் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்’ என்று சொல்லுங்கள்.+

  • உபாகமம் 4:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 உங்கள் கண்களால் பார்த்தவற்றை மறந்துவிடாதபடி மிகக் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருங்கள். இவை உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுடைய நெஞ்சைவிட்டு நீங்கக் கூடாது. இவற்றை உங்களுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.+

  • உபாகமம் 6:20-22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பிற்காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் உங்களிடம் வந்து, ‘நம் கடவுளாகிய யெகோவா ஏன் இந்த எச்சரிப்புகளையும்* விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கொடுத்திருக்கிறார்?’ என்று கேட்டால், 21 நீங்கள் அவர்களிடம், ‘எகிப்தில் நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம், ஆனால் யெகோவா தன்னுடைய கைபலத்தால் அங்கிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தார். 22 எகிப்துக்கும் பார்வோனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் கொடிய தண்டனைகளைக் கொடுத்தார். யெகோவா எங்கள் கண் முன்னால் பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தார்.+

  • சங்கீதம் 44:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 44 கடவுளே, பல காலத்துக்கு முன்னால் நீங்கள் செய்த அதிசயங்களைப் பற்றி எங்கள் காதுகளாலேயே கேட்டோம்.

      எங்கள் முன்னோர்களின் காலத்தில் நீங்கள் செய்த காரியங்களைப் பற்றி அவர்களுடைய வாயாலேயே கேட்டோம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்