30 அதன்பின் மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டுப் போய், அந்தக் கொடிய ஈக்களைப் போக வைக்கும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டார்.+ 31 மோசே கேட்டுக்கொண்டபடியே யெகோவா செய்தார். பார்வோனையும் அவனுடைய ஊழியர்களையும் ஜனங்களையும்விட்டு அந்தக் கொடிய ஈக்கள் போய்விட்டன. ஒன்றுவிடாமல் எல்லாமே போய்விட்டன.