8 அதனால் அவர் எழுந்து சாப்பிட்டு, தண்ணீர் குடித்தார். அந்தத் தெம்பில் 40 நாட்கள் ராத்திரியும் பகலும் நடந்து உண்மைக் கடவுளின் மலையாகிய ஓரேபுக்குப்+ போய்ச் சேர்ந்தார்.
9 அன்று ராத்திரி அங்கிருந்த ஒரு குகையில் தங்கினார்.+ அப்போது யெகோவா அவரிடம், “எலியா, இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்.