-
யாத்திராகமம் 14:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 உடனே மோசே கடலுக்கு நேராகத் தன் கையை நீட்டினார். பொழுது விடிய ஆரம்பித்தபோது, கடல்நீர் பழைய நிலைக்குத் திரும்பியது. எகிப்தியர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக முயற்சி செய்தார்கள். ஆனால், யெகோவா அவர்களைக் கடலுக்குள் மூழ்கடித்தார்.+ 28 இஸ்ரவேலர்களைக் கடலுக்குள் துரத்திச்சென்ற பார்வோனின் போர் ரதங்களும் குதிரைப்படைகளும் மற்ற எல்லா படைகளும் புரண்டுவந்த தண்ணீரில் மூழ்கிப்போயின.+ ஒருவர்கூட தப்பிப்பதற்குக் கடவுள் விடவில்லை.+
-
-
உபாகமம் 4:34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 உங்கள் கடவுளாகிய யெகோவா எகிப்தில் உங்கள் கண் முன்னாலேயே தண்டனைத் தீர்ப்புகள் கொடுத்து, அதிசயங்களையும் அற்புதங்களையும்+ செய்து, போராலும்+ கைபலத்தாலும்+ மகா வல்லமையாலும் பயங்கரமான செயல்களாலும்+ உங்களை விடுதலை செய்தாரே. இதுபோல் வேறெந்தக் கடவுளாவது ஒரு ஜனத்தை இன்னொரு ஜனத்தின் நடுவிலிருந்து தனக்காகப் பிரித்தெடுத்தது உண்டா?
-