-
லேவியராகமம் 24:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஒரு எகிப்தியனுக்கும் பிறந்த ஒருவன் இஸ்ரவேலர்களோடு வாழ்ந்துவந்தான்.+ ஒருநாள் அவனும் இன்னொரு இஸ்ரவேலனும் முகாமில் சண்டை போட்டார்கள். 11 அப்போது அவன், கடவுளுடைய பெயரைப் பழித்தும் சபித்தும் பேசினான்.+ உடனே அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்.+ அவனுடைய அம்மாவின் பெயர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த திப்ரியின் மகள்.
-
-
உபாகமம் 1:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது பாரபட்சம் காட்டக் கூடாது.+ செல்வாக்குள்ள மனுஷனின் நியாயத்தைக் கேட்பது போலவே சாதாரண மனுஷனின் நியாயத்தையும் கேட்க வேண்டும்.+ மனுஷர்களுக்குப் பயப்படாதீர்கள்,+ ஏனென்றால் நீங்கள் கடவுளின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள்.+ ஒரு வழக்கைத் தீர்ப்பது உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தால், அதை என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதை விசாரிப்பேன்’+ என்று சொன்னேன்.
-