-
யாத்திராகமம் 24:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 யெகோவாவின் மகிமை மலை உச்சியில் பற்றியெரியும் நெருப்பைப் போல இஸ்ரவேலர்களின் கண்களுக்குத் தெரிந்தது.
-
-
உபாகமம் 4:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அதனால், நீங்கள் அந்த மலையின் அடிவாரத்தில் வந்து நின்றீர்கள். அந்த மலையில் வானத்தைத் தொடுமளவுக்கு நெருப்பு எரிந்தது. இருண்ட மேகங்களும் பயங்கரமான இருட்டும் சூழ்ந்துகொண்டன.+ 12 அந்த நெருப்பிலிருந்து யெகோவா பேசினார்.+ அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டீர்கள், ஆனால் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை.+ அவருடைய குரலை மட்டும்தான் கேட்டீர்கள்.+
-
-
2 நாளாகமம் 7:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 சாலொமோன் ஜெபம் செய்து முடித்ததுமே,+ வானத்திலிருந்து நெருப்பு வந்து+ தகன பலியையும் மற்ற பலிகளையும் சுட்டெரித்தது. ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+ 2 யெகோவாவின் மகிமை யெகோவாவின் ஆலயத்தில் நிறைந்ததன் காரணமாக, குருமார்களால் யெகோவாவின் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை.+ 3 வானத்திலிருந்து நெருப்பு வந்ததையும், ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்ததையும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் அங்கே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள், “அவர் நல்லவர், என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று புகழ்ந்து பாடி யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள்.
-