18 ஒவ்வொரு கோத்திரத்துக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற நகரங்களில் நியாயாதிபதிகளையும்+ அதிகாரிகளையும் நீங்கள் நியமிக்க வேண்டும். ஜனங்களுக்கு அவர்கள் நீதியோடு தீர்ப்பு சொல்ல வேண்டும்.
25பின்பு அவர், “இரண்டு பேருக்கு இடையில் ஏதாவது வழக்கு இருந்தால், அவர்கள் நியாயாதிபதிகளிடம் வந்து முறையிடலாம்.+ அந்த நியாயாதிபதிகள் குற்றம் செய்யாதவனை* நிரபராதி என்றும், குற்றம் செய்தவனைக் குற்றவாளி என்றும் தீர்ப்பு கொடுப்பார்கள்.+