உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 19:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 இரத்தம் கலந்த எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது.+

      நீங்கள் சகுனம் பார்க்கவோ மாயமந்திரம் செய்யவோ கூடாது.+

  • லேவியராகமம் 20:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஆவிகளோடு பேசுகிறவர்களிடமும்+ குறிசொல்கிறவர்களிடமும்+ போவதன் மூலம் எனக்குத் துரோகம் செய்கிறவனை நான் ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.+

  • உபாகமம் 18:10-12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க* கூடாது.+ குறிசொல்லவோ,+ மாயமந்திரம் செய்யவோ,+ சகுனம் பார்க்கவோ,+ சூனியம் வைக்கவோ,+ 11 வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம்+ அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ,+ இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது.+ 12 ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். இந்த அருவருப்பான காரியங்களைச் செய்வதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரை உங்களிடமிருந்து துரத்திவிடுகிறார்.

  • 1 சாமுவேல் 28:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இதற்கு முன்பே சாமுவேல் இறந்துபோயிருந்தார். அவருக்காக இஸ்ரவேலர்கள் எல்லாரும் துக்கம் அனுசரித்து, அவருடைய ஊராகிய ராமாவில் அவரை அடக்கம் செய்திருந்தார்கள்.+ ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் சவுல் தேசத்திலிருந்து துரத்தியடித்திருந்தார்.+

  • கலாத்தியர் 5:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு,*+ பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு,

  • வெளிப்படுத்துதல் 22:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 நாய் போன்றவர்களும்,* ஆவியுலகத் தொடர்புகொள்கிறவர்களும், பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்களும், கொலைகாரர்களும், சிலைகளை வணங்குகிறவர்களும், பொய்யை விரும்பி பொய்யிலே புரளுகிறவர்களும்+ வெளியே இருப்பார்கள்.’

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்