2 அதனால் ஜனங்கள், “எங்களுக்குத் தண்ணீர் வேண்டும்” என்று சொல்லி மோசேயோடு தகராறு செய்தார்கள்.+ அப்போது மோசே, “நீங்கள் ஏன் என்னோடு தகராறு செய்கிறீர்கள்? ஏன் மறுபடியும் மறுபடியும் யெகோவாவைச் சோதித்துப் பார்க்கிறீர்கள்?”+ என்று கேட்டார்.
7 வனாந்தரத்தில் நீங்கள் எப்படியெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கோபத்தைக் கிளறினீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.+ நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து இந்த இடத்துக்கு வந்து சேரும்வரை, யெகோவாவின் பேச்சை மீறி நடந்திருக்கிறீர்கள்.+
27 உங்களுடைய கீழ்ப்படியாத போக்கும்+ பிடிவாத குணமும்+ எனக்கு நன்றாகத் தெரியும். நான் உயிரோடு இருக்கும்போதே நீங்கள் யெகோவாவின் பேச்சை இந்தளவுக்கு மீறுகிறீர்கள் என்றால், நான் இறந்த பின்பு இன்னும் எந்தளவுக்கு மீறுவீர்கள்!