உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 29:38-42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 ஒரு வயதுடைய இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைப் பலிபீடத்தின் மேல் தினமும் நீ பலி கொடு.+ 39 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளில் ஒன்றைக் காலையிலும் மற்றொன்றைச் சாயங்காலத்திலும் பலி கொடு.+ 40 ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவையும் இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர்* சுத்தமான ஒலிவ எண்ணெயையும் கலந்து எடுத்துக்கொள். அதோடு, ஒரு லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாக எடுத்துக்கொள். இவற்றை முதலாம் செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடன் செலுத்து. 41 காலையில் செய்தது போலவே சாயங்காலத்திலும் இரண்டாம் செம்மறியாட்டுக் கடாக் குட்டியை உணவுக் காணிக்கையோடும் திராட்சமது காணிக்கையோடும் பலி கொடுக்க வேண்டும். யெகோவாவுக்குப் பிடித்த வாசனையான தகன பலியாக அதைச் செலுத்த வேண்டும். 42 சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் தலைமுறை தலைமுறையாக அதைத் தினமும் யெகோவாவின் முன்னிலையில் எரிக்க வேண்டும். உன்னிடம் பேசுவதற்காக ஜனங்கள் முன்னால் நான் அங்கே தோன்றுவேன்.+

  • எண்ணாகமம் 28:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதோடு நீ அவர்களிடம், ‘குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் இரண்டை ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்குத் தகன பலியாக நீங்கள் செலுத்த வேண்டும். அதுதான் தினமும் செலுத்தப்படுகிற* தகன பலி.+

  • எபிரெயர் 10:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 தினமும் மக்களுக்குப் பரிசுத்த சேவை* செய்கிற ஒவ்வொரு குருவும்+ ஒரேவிதமான பலிகளைத் திரும்பத் திரும்பக் கொடுக்கிறார்;+ அவற்றால் ஒருபோதும் பாவங்களை முழுமையாகப் போக்க முடியாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்