உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 5:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதோடு, குற்ற நிவாரண பலியை யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவர வேண்டும்.+ அதாவது, பெண் செம்மறியாட்டுக் குட்டியையோ பெண் வெள்ளாட்டுக் குட்டியையோ பாவப் பரிகார பலியாகக் கொண்டுவர வேண்டும். அப்போது, குருவானவர் அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார்.

  • லேவியராகமம் 6:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 எந்தக் குறையுமில்லாத ஒரு செம்மறியாட்டுக் கடாவை மந்தையிலிருந்து கொண்டுவந்து தன்னுடைய குற்ற நிவாரண பலியாகக் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். தன் குற்றத்துக்காக யெகோவாவுக்கு அவன் செலுத்தும் இந்தப் பலி, நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின்படி இருக்க வேண்டும்.+

  • லேவியராகமம் 14:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “தொழுநோயாளி சுத்திகரிக்கப்படும் நாளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சட்டங்கள் இவைதான்: அவனைக் குருவானவரிடம் கொண்டுவர வேண்டும்.+

  • லேவியராகமம் 14:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 சுமார் 300 மில்லி எண்ணெயோடு, ஒரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் குற்ற நிவாரண பலியாகக்+ குருவானவர் செலுத்த வேண்டும். அவற்றை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+

  • லேவியராகமம் 19:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஒரு அடிமைப் பெண் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், அவள் மீட்கப்படாமலோ விடுதலை செய்யப்படாமலோ இருக்கலாம். அவளோடு ஒருவன் உடலுறவுகொண்டால் அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், அவர்களைக் கொல்லக் கூடாது. ஏனென்றால், அவள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. 21 அவன் யெகோவாவுக்குக் குற்ற நிவாரண பலி செலுத்த ஒரு செம்மறியாட்டுக் கடாவைச்+ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவர வேண்டும்.

  • எண்ணாகமம் 6:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அப்போது, அவர் யெகோவாவுக்கு நசரேயராக இருக்கும் நாட்கள் மறுபடியும் ஆரம்பிக்கும். அதற்காக, ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் குற்ற நிவாரண பலியாகக் கொண்டுவர வேண்டும். அவர் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டதால், ஏற்கெனவே நசரேயராக இருந்த நாட்கள் கணக்கில் சேராது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்