8 உங்களைத் தொழுநோய்* தாக்கினால், லேவி கோத்திரத்தின் குருமார்கள் சொல்கிற எல்லாவற்றையும் மிகக் கவனமாகச் செய்யுங்கள்.+ நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்ததை அச்சுப்பிசகாமல் செய்யுங்கள்.
23 ‘பரிசுத்தமான காரியங்களுக்கும் சாதாரணமான காரியங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் என் ஜனங்களுக்குக் கற்றுத்தர வேண்டும். சுத்தம் எது, அசுத்தம் எது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.+
7 குருவானவர் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும்.* சட்டத்தை* கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக ஜனங்கள் அவரைத் தேடி வர வேண்டும்.+ ஏனென்றால், அவரே பரலோகப் படைகளின் யெகோவாவுடைய சார்பில் பேசுபவர்.