10 ஆனால், ஏழாம் நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கான ஓய்வுநாள். அன்றைக்கு நீங்களோ, உங்கள் மகனோ மகளோ, உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆணோ பெண்ணோ, உங்கள் ஊர்களில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ, உங்கள் மிருகமோ எந்த வேலையும் செய்யக் கூடாது.+
13 “இஸ்ரவேலர்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் என் ஓய்வுநாளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.+ அது எனக்கும் உங்களுக்கும் இடையில் தலைமுறை தலைமுறையாய் ஒரு அடையாளமாக இருக்கும். யெகோவாவாகிய நான் உங்களைப் புனிதப்படுத்துகிறேன் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்வீர்கள்.