-
உபாகமம் 29:22-24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 இந்தத் தேசத்து நிலங்களை யெகோவா அழித்திருப்பதை உங்களுடைய வருங்காலத் தலைமுறையினரும் தொலைதூர தேசத்திலிருந்து வரும் மற்ற தேசத்தாரும் பார்ப்பார்கள். 23 யெகோவா தன்னுடைய கோபத்தாலும் ஆக்ரோஷத்தாலும் சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ ஆகிய இடங்களை அழித்ததுபோல், இந்தத் தேசத்து நிலங்களையெல்லாம் கந்தகத்தாலும் உப்பாலும் நெருப்பாலும் அழித்திருப்பதைப் பார்ப்பார்கள். அவை விதை விதைக்கப்படாமலும், பயிர்கள் முளைக்காமலும், எதுவுமே வளராமலும் கிடப்பதைப் பார்க்கும்போது 24 அவர்களும் எல்லா தேசத்தாரும், ‘இந்தத் தேசத்தை யெகோவா ஏன் அழித்துப்போட்டார்?+ அவருடைய கோபம் இந்தளவு பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன?’ என்று கேட்பார்கள்.
-