உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 15:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில், உங்கள் சகோதரன் ஒருவன் ஏழையாகிவிட்டால் அவனிடம் கல்நெஞ்சத்தோடு நடந்துகொள்ளாதீர்கள். அந்த ஏழை சகோதரனிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.+

  • உபாகமம் 15:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நீங்கள் அவனுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும்,+ வேண்டாவெறுப்போடு கொடுக்கக் கூடாது. அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.+

  • நீதிமொழிகள் 11:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 தாராளமாகக் கொடுக்கிறவன்* ஏராளமாகப் பெறுகிறான்.+

      கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் காட்டுகிறவன் ஏழையாகிறான்.+

  • நீதிமொழிகள் 19:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான்.+

      அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்.*+

  • லூக்கா 6:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள்.+ அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.

  • 2 கொரிந்தியர் 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இதைப் பற்றி நான் சொல்வது என்னவென்றால்: கொஞ்சமாக விதைப்பவர் கொஞ்சமாக அறுவடை செய்வார், ஏராளமாக விதைப்பவர் ஏராளமாக அறுவடை செய்வார்.+

  • 1 யோவான் 3:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆனால், இந்த உலகத்தில் பொருள் வசதிகள் உள்ளவன் தன்னுடைய சகோதரன் வறுமையில் வாடுவதைப் பார்த்தும், அவன்மேல் கரிசனை காட்ட மறுத்தால் கடவுள்மேல் அவனுக்கு அன்பு இருக்கிறதென்று எப்படிச் சொல்ல முடியும்?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்