23 அதனால் அந்த ஐந்து ராஜாக்களையும், அதாவது எருசலேமின் ராஜாவையும் எப்ரோனின் ராஜாவையும் யர்மூத்தின் ராஜாவையும் லாகீசின் ராஜாவையும் எக்லோனின் ராஜாவையும்,+ அவரிடம் கொண்டுவந்தார்கள்.
26 பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, அவர்களுடைய உடல்களை ஐந்து மரக் கம்பங்களில்* தொங்கவிட்டார். அவை சாயங்காலம்வரை மரக் கம்பங்களில் தொங்கிக்கொண்டிருந்தன.