-
1 நாளாகமம் 10:1-5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போய் ஓடினார்கள்; பலர் கில்போவா மலையில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.+ 2 சவுலையும் அவருடைய மகன்களையும் பெலிஸ்தியர்கள் துரத்திக்கொண்டே பக்கத்தில் வந்துவிட்டார்கள்; பின்பு, அவருடைய மகன்களான யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும்+ கொன்றுபோட்டார்கள். 3 சவுலை எதிர்த்து அவர்கள் தீவிரமாகப் போர் செய்தார்கள்; கடைசியில் வில்வீரர்கள் அவரைக் கண்டு அவர்மேல் அம்பு எறிந்தார்கள், அவர் காயமடைந்தார்.+ 4 அதனால் சவுல் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்தவனிடம், “உன் வாளை உருவி என்னைக் குத்திப்போடு; இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யாத அந்த ஆட்கள் வந்து என்னைக் கொடூரமாக* கொன்றுவிடுவார்கள்”+ என்று சொன்னார். ஆனால், அவன் மிகவும் பயந்ததால் தன்னால் முடியாதென்று சொல்லிவிட்டான். அதனால், சவுல் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டார்.+ 5 சவுல் இறந்துவிட்டதைப் பார்த்தபோது அவனும் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டான்.
-