உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 7:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அந்தப் பெட்டி கீரியாத்-யெயாரீமுக்குக் கொண்டுவரப்பட்டு 20 வருஷங்களான பிறகு, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் யெகோவாவின் உதவியைத் தேட ஆரம்பித்தார்கள்.+

  • 1 ராஜாக்கள் 8:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அந்தச் சமயத்தில், இஸ்ரவேல் பெரியோர்களை,* அதாவது எல்லா கோத்திரத் தலைவர்களையும் இஸ்ரவேலில் உள்ள தந்தைவழிக் குடும்பத் தலைவர்களையும், சாலொமோன் ஒன்றுகூடி வரச் சொன்னார்.+ ‘தாவீதின் நகரத்திலிருந்து,’+ அதாவது சீயோனிலிருந்து,+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுபோவதற்காக எருசலேமில் இருந்த சாலொமோன் ராஜாவிடம் அவர்கள் வந்தார்கள்.

  • 1 நாளாகமம் 13:1-5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்களோடும் நூறு வீரர்களுக்குத் தலைவர்களோடும் மற்ற எல்லா தலைவர்களோடும்+ தாவீது கலந்துபேசினார். 2 பின்பு தாவீது இஸ்ரவேல் சபையார் எல்லாரிடமும், “உங்களுக்கு நல்லதாகப் பட்டால், நம் கடவுளாகிய யெகோவா விரும்பினால், இஸ்ரவேல் தேசம் முழுவதும் குடியிருக்கிற நம்முடைய மற்ற சகோதரர்களையும் வரச் சொல்லி செய்தி அனுப்புவோம்; தங்களுடைய நகரங்களில்* குடியிருக்கிற குருமார்களையும் லேவியர்களையும்கூட வரவழைப்போம்.+ 3 பின்பு, எல்லாரும் சேர்ந்துபோய் நம் கடவுளுடைய பெட்டியைக் கொண்டுவருவோம்”+ என்று சொன்னார். ஏனென்றால், சவுலின் காலத்தில் அவர்கள் அந்தப் பெட்டியைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தார்கள்.+ 4 தாவீது சொன்னது எல்லா மக்களுக்கும் சரியாகப் பட்டதால், சபையார் எல்லாரும் அதற்கு ஒத்துக்கொண்டார்கள். 5 அதனால், உண்மைக் கடவுளுடைய பெட்டியை கீரியாத்-யெயாரீமிலிருந்து+ கொண்டுவருவதற்காக இஸ்ரவேலர்கள் எல்லாரையும் தாவீது ஒன்றுகூட்டினார்; சீகோர்முதல்* லெபோ-காமாத்வரை*+ குடியிருந்த மக்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்