உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 21:2-6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 யெகோவா வெறுக்கிற காரியங்களை மனாசே செய்தார். இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்;+ 3 தன்னுடைய அப்பாவான எசேக்கியா அழித்துப்போட்ட ஆராதனை மேடுகளைத்+ திரும்பக் கட்டினார்; இஸ்ரவேலின் ராஜா ஆகாபைப் போலவே+ இவரும் பாகாலுக்குப் பலிபீடங்கள் கட்டி, பூஜைக் கம்பத்தை* நிறுத்தினார்.+ வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டு வணங்கி, அவற்றுக்குச் சேவை செய்தார்.+ 4 அதோடு, யெகோவாவின் ஆலயத்திலேயே, “எருசலேமில் என் பெயரை நிலைநாட்டுவேன்”+ என்று யெகோவா சொல்லியிருந்த ஆலயத்திலேயே, பலிபீடங்களைக் கட்டினார்.+ 5 வானத்துப் படைகளை வணங்குவதற்காக யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும்+ பலிபீடங்களைக் கட்டினார்.+ 6 சொந்த மகனையே நெருப்பில் பலி கொடுத்தார்.* மாயமந்திர பழக்கங்களில் ஈடுபட்டார், சகுனங்கள் பார்த்தார்,+ ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் நியமித்தார்.+ யெகோவா வெறுக்கிற காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்து, அவரைப் புண்படுத்தினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்