-
எண்ணாகமம் 16:39, 40பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
39 அதனால் குருவாகிய எலெயாசார், நெருப்பில் பொசுங்கிய ஆட்களின் செம்புத் தூபக்கரண்டிகளைப் பலிபீடத்தைச் சுற்றிலும் பொருத்துவதற்காகத் தகடுகளாக அடித்தார். 40 யெகோவா மோசேயின் மூலம் சொன்னபடியே அவர் செய்தார். தகுதி இல்லாத யாரும், அதாவது ஆரோனின் வம்சத்தைச் சேராத யாரும், யெகோவாவின் முன்னிலையில் தூபம்காட்டக் கூடாது+ என்பதையும், கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் போல யாரும் ஆகிவிடக் கூடாது+ என்பதையும் அந்தத் தகடுகள் இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தின.
-
-
எண்ணாகமம் 18:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 பலிபீடத்திலும் திரைச்சீலையின் உள்ளேயும் குருமார்கள் செய்ய வேண்டிய வேலைகளை நீயும் உன் மகன்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்.+ குருத்துவச் சேவைக்கு நீங்கள்தான் பொறுப்பு.+ அதை நான் உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன். தகுதி இல்லாத* யாராவது வழிபாட்டுக் கூடாரத்தின் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்”+ என்றார்.
-