-
எரேமியா 34:18-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 கன்றுக்குட்டியை இரண்டாக வெட்டி, அதன் நடுவே நடந்துபோய், என்முன் ஒப்பந்தம் செய்துவிட்டு,+ பின்பு அதை மீறிய 19 யூதாவின் அதிகாரிகள், எருசலேமின் அதிகாரிகள், அரண்மனை அதிகாரிகள், குருமார்கள், ஜனங்கள் ஆகிய எல்லாருக்கும் வரப்போகிற கதி இதுதான்: 20 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையில் நான் அவர்களைக் கொடுத்துவிடுவேன். வானத்திலுள்ள பறவைகளும் பூமியிலுள்ள மிருகங்களும் அவர்களுடைய பிணங்களைத் தின்றுதீர்க்கும்.+
-