22 எல்லாம் ஒன்றுதான். அதனால்தான்,
‘நல்லவன், கெட்டவன் என்று பார்க்காமல் எல்லாரையும் அவர் அழிக்கிறார்’ என்று சொல்கிறேன்.
23 திடீரென்று வெள்ளம் வந்து நல்லவனை வாரிக்கொண்டு போனால் அவர் சிரிப்பார்.
அவன் தவிப்பதைப் பார்த்து கேலி செய்வார்.
24 பூமியைக் கெட்டவர்களின் கையில் அவர் விட்டுவிட்டார்.+
நீதிபதிகளின் கண்களைக் கட்டிவிட்டார்.
அவரைத் தவிர வேறு யார் அப்படிச் செய்வார்கள்?