உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 17:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 தன்னுடைய ஆலோசனைப்படி அப்சலோம் நடக்கவில்லை எனத் தெரிந்ததும், அகித்தோப்பேல் ஒரு கழுதைமேல் சேணம்* வைத்துத் தன்னுடைய சொந்த ஊருக்குப் போனான்.+ வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு,+ தூக்குப்போட்டுக்கொண்டு செத்தான்.+ பின்பு, அவனுடைய முன்னோர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்.

  • 2 சாமுவேல் 18:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதற்கு யோவாப், “உன்னிடம் பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று சொன்னார். பின்பு, அவர் கூர்மையான மூன்று கம்பிகளை* எடுத்து, மரத்தில் உயிரோடு தொங்கிக்கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் குத்தினார்.

  • சங்கீதம் 109:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவர்கள் செய்ததையெல்லாம் யெகோவா எப்போதும் நினைத்துப் பார்க்கட்டும்.

      அவர்களைப் பற்றிய நினைவை இந்த உலகத்திலிருந்து அடியோடு அழித்துப்போடட்டும்.+

  • மத்தேயு 27:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைப் பார்த்து மனம் வருந்தினான்; அதனால், முதன்மை குருமார்களிடமும் பெரியோர்களிடமும் அந்த 30 வெள்ளிக் காசுகளைத் திரும்பக் கொண்டுபோய்,+

  • மத்தேயு 27:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதனால், அவன் அந்த வெள்ளிக் காசுகளை ஆலயத்துக்குள் வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து போய்த் தூக்குப்போட்டுக்கொண்டான்.+

  • அப்போஸ்தலர் 1:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 “சகோதரர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த யூதாசைப்+ பற்றிக் கடவுளுடைய சக்தி தாவீதின் மூலம் முன்னதாகவே சொன்ன வசனம் நிறைவேற வேண்டியிருந்தது.+

  • அப்போஸ்தலர் 1:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஆனால், அவன் செய்த அநீதிக்குக் கிடைத்த கூலியை+ வைத்து ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு தலைகுப்புற விழுந்ததால் அவனுடைய வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போனது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்