19 அதனால், நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி,+ பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள்.+
9 ஆனால் நீங்கள், இருளிலிருந்து தன்னுடைய அற்புதமான ஒளியின் பக்கம் உங்களை அழைத்தவருடைய+ “மகத்துவங்களை* எல்லா இடங்களிலும் அறிவிப்பதற்குத்+ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக, ராஜ அதிகாரமுள்ள குருமார்களாக, பரிசுத்த ஜனமாக,+ அவருடைய விசேஷ சொத்தாக”+ இருக்கிறீர்கள்.
6 பின்பு, இன்னொரு தேவதூதர் நடுவானத்தில்* பறப்பதைப் பார்த்தேன்; பூமியில் குடியிருக்கிற எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும் நித்திய நல்ல செய்தியை அவர் அறிவித்துக்கொண்டிருந்தார்.+