உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 15:1-5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்?

      யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?+

       2 குற்றமில்லாமல்* நடந்து,+

      எப்போதும் சரியானதைச் செய்து,+

      இதயத்தில் உண்மையைப் பேசுகிறவன்தான்.+

       3 அப்படிப்பட்டவன், மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேச மாட்டான்.+

      மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டான்.+

      நண்பர்களைப் பற்றிக் கேவலமாகப் பேச மாட்டான்.*+

       4 கீழ்த்தரமாக நடக்கிறவனோடு சேர மாட்டான்.+

      யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு மதிப்பு மரியாதை காட்டுவான்.

      எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும்* கொடுத்த வாக்கை மீற மாட்டான்.+

       5 வட்டிக்குக் கடன் கொடுக்க மாட்டான்.+

      அப்பாவிகள்மேல் குற்றம் சுமத்துவதற்காக லஞ்சம் வாங்க மாட்டான்.+

      இப்படிப்பட்டவன் அசைக்கப்படவே* மாட்டான்.+

  • சங்கீதம் 27:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யெகோவாவிடம் ஒன்றைக் கேட்டேன்.

      யெகோவா எவ்வளவு இனிமையானவர் என்பதைப் பார்த்துக்கொண்டும்,

      அவருடைய ஆலயத்தைப் பிரமிப்போடு ரசித்துக்கொண்டும்,*+

      என் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டுமென்று கேட்டேன்.+

      அதற்காகத்தான் எப்போதும் ஏங்குவேன்.

  • சங்கீதம் 65:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 உங்களுடைய பிரகாரங்களில் தங்குவதற்காக நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்து,

      உங்கள் பக்கத்தில் கொண்டுவருகிறீர்களோ அவர் சந்தோஷமானவர்.+

      நாங்கள் உங்களுடைய வீடாகிய பரிசுத்த ஆலயத்தில்+ கிடைக்கும் நன்மைகளால் திருப்தியடைவோம்.+

  • சங்கீதம் 122:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 122 “யெகோவாவின் ஆலயத்துக்குப் போகலாம், வாருங்கள்” என்று

      அவர்கள் கூப்பிட்டபோது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்