7 எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்: 2 “யெகோவாவாகிய என்னுடைய ஆலயத்தின் நுழைவாசலில் நின்று இந்தச் செய்தியை எல்லாருக்கும் சொல்: ‘யெகோவாவை வணங்குவதற்காக இந்த நுழைவாசலைத் தாண்டி வருகிற யூதா ஜனங்களே, யெகோவா இப்போது சொல்வதைக் கேளுங்கள்.