16 “நீ போய் எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்கிடம்+ இப்படிச் சொல்: ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “நான் சொன்னபடியே இந்த நகரத்துக்குச் செய்யப்போகிறேன். இதை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக அழிக்கப்போகிறேன். இது நிறைவேறுவதை நீ உன் கண்களால் பார்ப்பாய்.”’